அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Sunday, April 25, 2010

அவள் நினைவுகளுடன் என்றும்.........! கவிதை

தவறுகள் செய்திட
தவறவில்லை
தாவணி கனவுகளால் ....
உறவுகள் சொன்னதை
உணரவில்லை
உறக்கத்திலும் நினைவுளுடன்
கிறுக்கல்கள் நிறைந்த
கடிதங்களை
கிழித்து எறியவும் மனமில்லை
பள்ளி சென்றும்
பயிலவில்லை
பாவையாலே தொல்லை....
விளையாட்டு வீரனாக
வீதியிலே
விலைபோகிடாதவனாக உலகிலே...?
நெருக்கங்கள் நிறைவாகவே
இறுக்கங்களும் வந்தது விரைவாகவே
இன்பங்களை தொலைத்துவிட்டு
தடுமாறுகின்றவனாக
தடம் மாறாமல்
அவள் நினைவுகளுடன் என்றும்.........!

No comments:

Post a Comment