அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Wednesday, November 28, 2012

சமையல் குறிப்புகள்
முட்டைக் கொத்சு

தேவையான பொருட்கள்
முட்டை - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - 3 சிட்டிகை
எண்ணெய் - 4 ஸ்பூன்

செய்முறை
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நைஸாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடானவுடன் எண்ணெய் ஊற்றி, நறுக்கியவைகளை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு முட்டையை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கி அதில் ஊற்றி முக்கால் வேக்காடாக இருக்கும்போதே இறக்கிவிடவும்.
இது ஆப்பத்திற்கு சுவையான ஒரு தொட்டுக்கறி!குறிப்பு:
இதை நன்றாக வேகவைக்கக்கூடாது. விழுது போன்று குழைவாக இருக்கவேண்டும். அரை வேக்காடாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.

முட்டை சால்னா

தேவையான பொருட்கள்
முட்டை - 4
பழுத்த தக்காளி - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தேங்காய்ப்பால் - 1கப்
தேங்காய் விழுது - 1/2 கப்
மல்லிக்கீரை - பாதி கட்டு
மசாலாத்தூள் - 1ஸ்பூன்
மல்லித்தூள்- 3ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்
எண்ணெய் - 4ஸ்பூன்
உப்பு - 1/2ஸ்பூன்

செய்முறை
பச்சை மிளகாய், பாதி வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு எண்ணெயில் போட்டு தாளித்து, முறுக ஆரம்பிக்கும்போது மிளகாய்த்தூள் போட்டு, பிறகு மீதி வெங்காயம், தக்காளியை நைஸாக அரிந்து போட்டு வதக்கவேண்டும்.
ஓரளவு கூழ் போன்று வதங்கியவுடன் தேங்காய்பால் ஊற்றி, தேங்காய் விழுது, மசாலாத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு கொதிக்கவிடவேண்டும்.
கொதிக்க ஆரம்பிக்கும்போது முட்டையை உடைத்து கலங்காமல் அதில் ஊற்றி, மல்லிகீரையை நைஸாக அரிந்துப்போட்டு 3 அல்லது 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கிவிடலாம்.

இது இடியப்பம், பராசப்பம் போன்றவற்றுக்கு ஒரு நல்ல, ஈஸியான சைட் டிஷ்!


முட்டை கட்லெட்

தேவையான பொருட்கள்:

முட்டை - 5
மிளகாய்தூள் - 1 கரண்டி
மசாலாதூள் - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
வெங்காயம் - 1
தேங்காய்பால் - அரை கப்
மிளகுதூள் - 1 தேக்கரண்டி
மைதா - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 250 கிராம்

செய்முறை:

முட்டை, உருளைக்கிழங்கை ஆகியவற்றை வேகவைத்து தோல் எடுக்க வேண்டும். முட்டையை இரண்டாக வெட்ட வேண்டும். ஒரு முட்டையை சிறிது உப்பு மிளகு போட்டு கலக்கி வைக்க வேண்டும். வெங்காயத்தை மிக பொடியாக நறுக்க வேண்டும்.

உருளைக்கிழங்கை கட்டியில்லாமல் மசித்து அதனுடன் தேங்காய் பால், வெங்காயம், மைதா போட்டு நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். அதனை கையில் வட்டமாகத் தட்டி நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும். அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் நனைத்து எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment