அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Sunday, May 2, 2010

கைக்குழந்தை-சிறுகுழந்தைகள்: பெற்றோர்கள் கவனத்திற்கு

கைக்குழந்தை முதல் சிறுகுழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

1) எக்காரணத்தை கொண்டும் குழந்தைகள் முன்னால் பெற்றோர் சண்டையிடக் கூடாது.

2) குழந்தையின் உடல் நல விசயத்தில் எந்த நிலையிலும் பதட்டம் அடைய வேண்டாம்.

3) வீட்டில் கட்டாயம் டிஜிட்டல் தெர்மா மீட்டரும், காய்சலுக்கான மருந்தும், வெட்டு காயம் உண்டானால் தடவும் களிம்பும், பஞ்சும் மிக அவசியம்.

4) தடுப்பூசி போடும் அட்டவணையையும், குழந்தையின் உடல் நடை சம்பந்தமாக கிடைக்கும் அட்டவணைகள் படுக்கை அறையில் ஒட்டி வையுங்கள்.

5) அவசர காலத்தில் உதவ நண்பர்கள், வாகன ஓட்டிகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் போன்றோரின் தொடர்பு எண்களை அச்சிட்டு தொலைப்பேசி அருகில் ஒட்டி வையுங்கள்.

6) குழந்தைக்கு உடம்பு சூடானால், தொடர்ந்து நன்கு பிழியப்பட்ட ஈரத்துணியால் நெற்றியில் துடைக்கவும்.

7) உணவுகள் உண்ண வாயில் கட்டாயமாக திணிக்காதீர்கள். அவர்கள் பசி எடுக்கும் போது சாப்பிட பழக்குங்கள், மேலும் பெற்றோர் உண்ணும் போது அருகில் அமரச் செய்து ஆசையாக ஊட்டி விடலாம்.

8) இரவில் தூங்கும் போது உங்கள் அருகிலேயே தூங்கட்டும். விழித்து விளையாடினால் அவர்கள் இஷ்டம் போல் விட்டு விடுங்கள்.

9) தடிமனான அட்டையில் அச்சிட்ட பறவைகள், விலங்குகள், உணவுகள், கருவிகள் போன்ற அட்டவணைகள் வாங்கி அதை சொல்லி கொடுங்கள்.

10) குழந்தைகள் அழுது அடம்பிடித்து சாதிக்கும் முன்னரே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்.

11) குழந்தைகளை நல்ல செல்லப் பெயர்கள் சொல்லி அழைத்து வாருங்கள், தினமும் உப்புமூட்டை, ஓடி ஒளிவது போன்ற எளிய விளையாட்டுகள் விளையாடுங்கள்.

12) எந்த காரணத்தைக் கொண்டும் உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட வேண்டாம், ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையில் வளரும்.

13) வெளியே செல்லும் போது குழந்தைகள் உங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் உடை உடுத்துங்கள், அதே குழந்தைகளின் உடையும் தேர்வு செய்யுங்கள், அவர்களிடம் உங்கள் தொலைபேசி எண் இருப்பது போல் செய்யுங்கள்.

14) ஐஸ்கிரிம், சாக்லெட், சிப்ஸ் போன்றவை தினம் தினம் உணவாக கொடுக்காமல், அவர்களை பாராட்டும் போது கொடுக்கும் பரிசாக அவர்களுக்கு புரிய வையுங்கள்.

15) குழந்தைகளின் ஒவ்வொரு செயலையும் ரசித்து பாராட்டுகள். கீழே விழுந்தால் அவர்களாகவே எழுந்து வரட்டும்.

16) குழந்தைகளுக்கு சின்ன வயசிலேயே கழிப்பறைக்கு செல்ல சொல்ல கொடுங்கள், பல் தேய்ப்பது, குளிப்பது போன்றவை சுயமாக செய்ய கற்றுக் கொடுங்கள்.

No comments:

Post a Comment