அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Monday, March 14, 2016

யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்!


யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்!
சில தினங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு, எங்களுக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் அவரது கணவனோடு வந்திருந்தார்.
அவரின் வயது பற்றி எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டுதான் இருந்தது. மனிசு சொன்னது தன்னொத்த வயது இருக்கும் என்று! அதாவது 35. மகள் சொன்னாள் அவருக்கு 34 மட்டில் தான் இருக்கும் என்று. நான் சொன்னேன் அவர் வந்தவுடன் அவவிடமே கேட்டுப் பார்ப்போம்.
புருஷனோடு அந்த சர்ச்சைக்குரிய பெண்மணி எங்கள் வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சிரித்துக் கொண்டோம். வந்திருந்த பெண்மணி ஊர் துளவாரங்களில் அவ்வளவு விருப்பம் இல்லாத பெண்மணி. எங்களின் சிரிப்பை என்ன என்றும் கேட்கவில்லை.
கடைசியில் புருஷனும் பெண்சாதியும் நாங்களும் ஒரு பிளேன் டீ குடித்ததன் பின்பு மகள் தான் கேட்டாள் "அண்ணி உங்களுக்கு என்ன வயது?" என்று! எங்களுக்குள் சர்ச்சை என்றும் சொன்னாள். எங்களில் யாரும் 35 வயதுக்கு மேல் மதிக்கவில்லை என்பதையும் சொன்னோம்.
அதற்கவர் "நான் யாருக்கும் வயது சொல்வதில்லை நீ கேட்டபடியால் மட்டும் சொல்கிறேன் எனக்கு 41" என்றார்.
மகளும் மனிசியும் ஆச்சரியத்தை முகம், கண், வாய் எல்லாவற்றாலும் வெளிப்படுத்தினார்கள். அவ்வளவு இளமை அந்த பெண்மணியிடம்!
இந்தப் பெண்கள் ஏன் வயதை சொல்வதில் பின்னடிக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் விடை இல்லை.

Mashallah Beautiful Islamic Song (Arabic)


Friday, November 13, 2015

அல்லாஹ்வின் அருள்மொழி

நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல்!
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்.(ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள். தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர். எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன்: 3:110)
அல்லாஹ்வை மறக்க வைத்த உலகின் வீணான ஆசைகள்!
தாங்களும் முஸ்லீம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள். (இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக! அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன. (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 15:42-3)
இத்தகைய கொடுமைக்காரர்கள் அல்லாஹ்விடம் அச்சம் கொள்ளமாட்டார்களா?
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்: 2:114)
அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்தை உறுதியாக்கி, வீண்பெருமையை தவிர்த்தல்!
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான். இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும். அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும். நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள். (அல்குர்ஆன்: 2:272)
விசாலமான இறையருள்!
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன். யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன்: 2:261)
அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். அவனே மரிக்கச் செய்கிறான்!
முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள். பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி(அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்; "அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்" என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான். மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். அவனே மரிக்கச் செய்கிறான். இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 3:156)
இறைவன் நாடியவருக்கே நேர்வழி
(நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உங்களால் முடியாது. எனினும், தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்!'' (அல்குர்ஆன் 28:56)

Tuesday, April 28, 2015

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும்

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு பாகத்தை (மனிதன், ஜின், பறவைகள், மிருகங்கள், ஊர்வன என) அனைத்துப் படைப்பினங்களுக்கிடையே அல்லாஹ் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன்மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டி மீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா 4291)

உம்ராச் செய்யும் முறை

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எமது இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!.

இஸ்லாமிய சகோதரனே! புனித மக்காவிற்குச் சென்று உம்ராச் செய்வதில் அதிக நன்மை உண்டு. அந்நன்மைகளை அடைந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நாம் மக்காவிற்குச் சென்று உம்ராச் செய்கின்றோம். நாம் செய்கின்ற உம்ரா நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய முறைப்படி இருக்க வேண்டும். அப்போதுதான் அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே உம்ராவிற்கு செல்பவர்கள் இப்பிரசுரத்தை படிப்பதன் மூலம் உரிய முறையில் தங்களது உம்ராக்களை நிறைவேற்றலாம் என எண்ணுகின்றேன்.

உம்ராச் செய்யும் முறைகள்:
உம்ராச் செய்ய நாடுபவன் “மீகாத்” எல்லையை வந்தடைந்ததும் குளித்து, தன்னை சுத்தம் செய்து கொள்வது ஸுன்னத்தாகும். பெண்களும் ஆண்களை போன்று இவ்வாறு குளித்து, தங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய், பிள்ளைப்பேறு இரத்தப்போக்கு ஏற்பட்ட பெண்கள் கூட குளிப்பது ஸுன்னத்தாகும். பின்னர் சிறந்த நறுமணங்களைப் பூசிக் கொள்ள வேண்டும். இது ஸுன்னத்தாகும். இஹ்ராம் அணிந்ததன் பின்னர் அதன் சுகந்தம் இருந்தால் அதில் குற்றமில்லை.

உம்ராச் செய்ய செல்லும் ஆண்கள் தைத்த ஆடைகள் அணியக்கூடாது. தைத்த ஆடைகள் அனைத்தையும் கழற்றி விட்டுப் தைக்காத, சுத்தமான இரண்டு வெள்ளை ஆடைகளை மாத்திரம் அணிந்து கொள்ள வேண்டும். இது தான் ஸுன்னத்தாகும்.

இதற்கு ‘இஹ்ராம் ஆடை’ எனச் சொல்லப்படும். பெண்கள் வழமையில் தாங்கள் அணிகின்ற, விரும்பிய எந்த ஆடையானாலும் அதை அவர்கள் அணியலாம்.

பின்னர் மீகாத் எல்லையில் உம்ராவிற்காக நிய்யத் செய்யுமுன் அவ்விடத்தில் பள்ளிவாசல் இருந்து, கடமையான தொழுகை நேரமாக அது இருந்தால் அத்தொழுகையை நிறைவேற்ற வேண்டும். தொழுகை நேரமில்லையென்றால் பள்ளிக் காணிக்கையான “தஹிய்யதுல் மஸ்ஜித்” இரண்டு ரகாஅத் தொழுது கொள்ள வேண்டும்.

பின்னர், உம்ராச் செய்யச் செல்பவன் மீகாத் எல்லையிலிருந்து “லப்பைக்க உம்ரத்தன் ” என்று உம்ராவிற்காக நிய்யத் செய்ய வேண்டும். மனதால் நிய்யத் செய்வதோடு நாவால் மொழிவதும் ஸுன்னத்தாகும்.

பின்னர் ஆண் பெண் அனைவரும் “தல்பியா” சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து, அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் இதை சப்தமிட்டும், பெண்கள் மற்றவர்களுக்குக் கேட்காமல் தங்களுக்குள்ளே கேட்குமளவிற்கு மெதுவாகவும் தல்பியா சொல்ல வேண்டும்.
மேலும் மக்காவை வந்தடையும் வரை அதிகமாக திக்ர் செய்வதும், அதிகமாக பிரார்த்தனை செய்வதும் ஸுன்னத்தாகும்.

தல்பியா சொல்லும் முறை:
“லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லாஷரீக லக்”
(பொருள்: “நான் வந்து விட்டேன். யா அல்லாஹ் நான் வந்து விட்டேன். நான் வந்து விட்டேன். உனக்கு இணையாக எவரும் இல்லை. நான் வந்து விட்டேன். நிச்சயமாக அனைத்துப் புகழும், ஆட்சியும், அதிகாரமும் உனக்கு மட்டுமே உரித்தது. (மீண்டும் கூறுகிறேன்) உனக்கு இணை எவரும் இல்லை”).

பின்னர் உம்ராச் செய்ய வருபவன் மக்காவில் மஸ்ஜிதுல் ஹராமை வந்தடைந்ததும் தனது வலது காலை வைத்து பிரவேசிக்கும் போது கீழ் வரும் துஆவை (பிராத்தனையை) ஓத வேண்டும். அதாவது:

“பிஸ்மில்லாஹ் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸுலில்லாஹ் அல்லாஹும்மஃக்பிர்லீ துனூபீ வஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக. அஊது பில்லாஹில் அளீம், வபிவஜ்ஹிஹில் கரீம், வபிசுல்தானிஹில் கதீம் மினஷ் ஷைதானிர் ரஜீம்”

(பொருள்: “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர் மீது உண்டாவதாக. யா அல்லாஹ் என் பாவங்களை மன்னித்து உன் கருணையின் கதவுகளை எனக்குத் திறந்து விடுவாயாக. சாபத்திற்கு ஆளான ஷைதானின் தீங்கிலிருந்து தப்பித்துக் கொள்ள சர்வ சக்தியும், உயர்ந்த பார்வையும், முழுமையான அதிகாரமும் படைத்த அல்லாஹ்வின் உதவியை நாடி நிற்கின்றேன்”)

பின்னர் அவன் தல்பியாக் கூறுவதை விட்டு விட்டு நேராக ஹஜருல் அஸ்வத் எனும் கல்லை முத்தமிட செல்ல வேண்டும். அக்கல்லை முத்தமிட முடியாமல் போனால் அதன் பக்கம் திரும்பி கையைக் காட்டுவது போதுமானது. அச்சமயம் அங்கிருப்போருக்கு தொல்லை தரும் விதத்தில் நடந்து கொள்வது கூடாது. மற்றவர்களைத் தள்ளிக் கொண்டு பலாத்காரமாக எதையும் செய்வதற்கு முற்படக் கூடாது. அனைத்தையும் மிக அமைதியாகச் செய்ய வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொடும் போது கீழ் வரும் துஆவை ஓத வேண்டும். அதாவது:

“பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்.அல்லாஹும்ம ஈமானன் பிக, வதஸ்தீகன் பிகிதாபிக, வவஃபாஅன் பிஅஹ்திக, வ இத்திபாஅன் லிஸுன்னதி நபிய்யிக முஹம்மதின் ஸல்லல்லாஸு அலைஹி வஸல்லம்”
(பொருள்: “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்; அல்லாஹ் மிகப் பெரியவன்; யா அல்லாஹ் உன்னை நம்பிக்கை கொண்டு, உன்னுடைய வேதத்தை உண்மைப்படுத்தி, உன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி, உன்னுடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களின் ஸுன்னத்தை பின்பற்றியவனாக இதை நான் செய்கின்றேன்”)

ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட முடியவில்லையென்றால் தனது கையால் சைக்கினை மாத்திரம் செய்து கொள்ள வேண்டும். கையால் சைக்கினை செய்து அக்கையை முத்தமிடக் கூடாது. பின்னர் தவாஃப் செய்ய வேண்டும்.

Wednesday, February 5, 2014

திருக்குர்ஆனை படிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்!

திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் படிப்பதோடு நின்றுவிடாமல் அதனை ஆழமாக சிந்தித்துப் பார்ப்பவர்கள்; இன்ஷா அல்லாஹ், ''எவருடைய கண்களும் காணாத, எவருடைய காதுகளும் கேட்டிராத இனிமையான சுவனத்திற்கு வழிகாட்டும் தித்திக்கும் தேன்மொழியாக'' அதனைக் காண்பார்கள் - உணர்வார்கள்.
 (இது திருக் குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை (அல்லாஹ்வாகிய) நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.'' (அல்குர்ஆன்: 24:1)


 அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). (அல்குர்ஆன்: 18:02)


 தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்குர்ஆன்: 9:32)


 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ‘ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66)


 இன்னும் எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 22:3)

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்

  அல்லாஹ்வின் வாக்குறுதிகள்  

அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்

* (நபியே!) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 4:77)

* அல்லாஹுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான கூலி) உங்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படும். அதில் ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 8:60)

* அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்கு பரிபூரணமாத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (c2:272)

* (நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக் கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவது போல்) அல்ல. அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இவ்விஷயத்தில்) எவரும் ஒரு அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:49)

* நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்)புத்தகம் நம்மிடம் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 23:62)

* ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு. ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பரிபூரணமாகப் பெறுவதற்காக. ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 46:19)

* எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான-நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்து விடுமென்றோ பயப்பட மாட்டார். (அல்குர்ஆன் 20:112)

* எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு நன்மை உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப் போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார். (அல்குர்ஆன் 6:160)

* தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டு, ஸாலிஹான (நற்) செயல்களைச் செய்கிறார்களோ அவர்களைத் தவிர; (மற்றவர்கள் நரகக் கேட்டை சந்திப்பார்கள்) அத்தகைய (ஸாலிஹான)வர்கள் ஜன்னத்(சுவர்க்கத்)தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டி நற்பயன்கள்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 19:60)

* நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)

* (நபியே!) நாம் எல்லா மக்களையும் அவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவர்களது வலது கரத்தில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 17:71)

* ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அல்லாஹ் அனுப்பிய இறை தூதர் உண்டு; அவர்களுடைய தூதர்(அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 10:47)

* பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; அவர்களது செயல் குறிப்பேடு அவர்கள் முன் வைக்கப்படும்; இன்னும் நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 36:69)

* அல்லாஹ் (தன்) அடியார்களுக்க அநியாயம் செய்ய நாட மாட்டான். (அல்குர்ஆன் 40:31)