அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Monday, April 19, 2010

ஆன்மீகம்

ஒரு கிராமவாசி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.

1 நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?
• நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.

2 மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
• தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

3 நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
• ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

4 நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.
• ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.

5 நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?
• நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்

6 நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?
• அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

7 அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
• அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள .

No comments:

Post a Comment