அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Monday, April 16, 2012

விதியை நம்புதல்


விதியை நம்புதல்

நமக்கு ஏற்படக்கூடிய நன்மை, தீமைகள் யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது என்று நம்பிக்கை கொள்வதுதான் விதியை நம்புவதாகும்.

விதியை நம்புவது இஸ்லாமிய நம்பிக்கையில் முக்கியமான ஒரு அம்சம். எல்லா நம்பிக்கைகளுக்கும் அறிவுப் பூர்வமாக விளக்கம் அளிக்க முடியும் என்றாலும், விதியைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சர்ச்சை செய்யக் கூடாது என்று சொல்லி­ விட்டார்கள்.

ஏனென்றால் ஒரு கோணத்தில் பார்க்கும் போது விதி இருப்பது போலவும், இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது விதி இல்லாதது போலவும் ஒரு மயக்கம் மனிதனுக்கு ஏற்படும்.

விதி என்று ஒன்று இருந்தால் நல்லவனாக, கெட்டவனாக நடப்பதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என்ற கேள்வி அதில் எழும்.

Tuesday, April 10, 2012

விருப்பம்

1. விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.

2. உடுக்க விரும்பினால் உயர்வையும், உண்மையையும் உடுத்திக்கொள்ளுங்கள்.

3. அறிய விரும்பினால் நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

4. கொடுக்க விரும்பினால் பிறருக்கு நலவைத்தருவதையும், பயனளிக்கத்தக்கவற்றையும் கொடுங்கள்.

5. வாங்க விரும்பினால் ஏழை, அனாதைகளின் ஆசிகளை வாங்குங்கள்.

6. பேச விரும்பினால் இன்சொற்களையும்,நன் சொற்களையும் பேசுங்கள்.

7. அடிக்க விரும்பினால் மன இச்சைகளையும், துவேஷங்களையும் அடித்து வீழ்த்துங்கள்.

8. களைய விரும்பினால் துர்பழக்கத்தையும்,முன்கோபத்தையும் களைந்துவிடுங்கள்.

9. உண்ண விரும்பினால் ஹலானவற்றியும்,தூயவனவற்றையும் உண்ணுங்கள்.

10. தர்கிக்க விரும்பினால் கண்ணியமானவர்களிடமும், உயர்வானவர்களிடமும்  தர்கியுங்கள்.