அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Tuesday, November 20, 2012

தூக்கம் மறந்த கண்கள்!


   தூக்கம் மறந்த கண்கள்!   

இறைவன் நமக்கு கொடுத்த அருட்கொடைகளில் ஒன்றான தூக்கத்தினை நம்மில் பலர் பேர் அலட்சியப்படுத்துகிறோம். இன்றைய பாஸ்ட் புட் காலத்தில் நமக்கு தூக்குவதற்கு நேரம் கிடைப்பது இல்லை. காலம் தவறி தூங்கி வருகிறோம்.

தூக்கம் சரியாக இல்லையென்றால் நமக்கு நோய்கள் தான் அதிகம் வரும் என்பது நமக்கு தெரிந்தும் தூக்கத்தினை குறிப்பிட்ட நேரத்துக்குள் தூக்கி குறிப்பிட்ட நேரத்திற்குள் எழும்பி விட வேண்டும் என்பதினை நாம் பேணி காப்பது இல்லை. ஆகையால் பலர் இவ்வுலகத்தில் மனக்கஷ்டம், மனச்சுமை, மனப்பாரம் போன்ற காரண காரியங்களால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பாடுகிறார்கள் என்பது நமக்கு தெரிந்தது தான்.

மேற்குலகில் உள்ளவர்கள் பலர் பணம் பணம் என்று பேயாக அலைகிறார்கள். இதனால் அவர்கள் தூக்கம் என்பது என்ன..? என்று கேள்வி கேட்கக்கூடிய அளவிற்கு போய் விட்டார்கள். நிம்மதியினை எங்கேயோ தொலைத்து விட்டவர்களாக ஆகி விட்டார்கள். போர் மூலமாக பல நாடுகளில் உள்ள மக்களின் தூக்கத்தினை கெடுத்த இந்த ஆதிக்கச்சக்திகளுக்கு எங்கே தூக்கம் வரப்போகிறது..?

பிரிட்டனை சார்ந்தவர்கள் நல்ல ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றால் அவர்களுக்கு குறைந்தது, ஒரு மில்லியன் பவுண்டுகள் தேவைப்படுகிறது. ஆடம்பர செலவுகள் அநாவசிய செலவுகள் என்று செலவு செய்வதால் ஒரு குடும்பத்திற்கு 5.8 மில்லியன் பவுண்டுகள் சாதாரணமாக தேவைப்படுகிறது. இதுவே கொஞ்சம் ஆடம்பரமாக இருக்க வேண்டுமென்றால் அதனை விட பல மடங்கு பவுண்டுகள் தேவைகளாக உள்ளன.

தற்போது இங்கிலாந்து நாட்டில் 400,000 மில்லியனர்கள் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை முறையினை காணும் மற்ற மக்கள் நாமும் பணக்காரர்கள் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்ட பல தனியார் லாட்டரி மற்றும் சூதாட்ட ஏஜெண்டுகள் மேலை நாட்டு மக்களை கவர வேண்டும் என்பதற்காக பல வழிமுறைகளில் அவர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு வேண்டியது, பணம் என்பதால் சிறுக சிறுக பணத்தினை அதில் போடுகிறார்கள். ஆனால் பணம் அதிகம் சேர்ந்து விடும் போது அந்த ஏஜெண்டுகள் எங்கு போனார்கள், என்ன ஆனார்கள் என்பது அந்த மக்களுக்கு தெரியாது.

ஏமாற்றப்பட்டப்பின் தூக்கம் என்பதினை மறந்து விடுகிறார்கள். ஆகையால் அவர்களை கவலை என்ற நோயானது பிடித்துக்கொள்கிறது. இது போல் நம்முடைய இந்தியாவிலும் லாட்டரி மற்றும் சூதாட்டம் போன்றவைகள் ஆடம்பரமான கிளப்பில் இருந்து முளைத்துக்கொண்டு வருகிறது. ஆகையால் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். லாட்டரி மற்றும் சூதாட்டம் போன்றவற்றிலிருந்து சம்பாதிக்கும் பணமானது பாவச்செயல் என்று திருமறை திருக்குர்ஆன் மிக அழகாக தன்னுடைய அல்மாயிதா 5 வது அத்தியாயம் 90 வது வசனத்தில் கூறுகிறது.

விசுவாசங்கொண்டோரே.. நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக) நடப்பட்டுள்ளவை (களான சிலை)களும், குறி பார்க்கும் (சூதாட்ட) அம்புகளும் (ஆகிய இவையாவும்) ஷைத்தானுடைய செயலிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே, இவைகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள், (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

மோசடி மற்றும் ஏமாற்றுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதால், அந்த செயலினை செய்தவரும் தூக்கம் இல்லாமல் பாதிக்கபடலாம் அத்துடன் அந்த தீயச்செயலினால் பாதிக்கப்பட்டவருக்கும்; தூக்கம் இல்லாமல் போய் விடும். மோசடி, மற்றும் பிறரை ஏமாற்றுதல் போன்ற தீயக்காரியங்களில் ஈடுபடக்கூடாது என்பதினை பற்றி கீழ்க்கண்ட ஹதீஸும் நமக்கு வலியுத்துகிறது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

ஊசி நூல் போன்ற பொருட்களைக்கூட திரும்பக் கொடுத்து விடுங்கள். மேலும், மோசடி செய்வதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில், மோசடி என்பது மறுமை நாளில் இழிவுக்கும் மனவருத்திற்கும் வழி வகுக்கும். (அறிவிப்பாளர் : உபாதா இப்னு ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : நஸாயீ, மிஷ்காத்)

அமெரிக்க நாட்டினை எடுத்துக்கொண்டால், ஐந்தில் ஒரு அமெரிக்கர் என்ற விகிதாச்சரப்படி தூக்கம் இல்லாமல் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்ற செய்தியினை அங்கிருந்து வரும் பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. மற்றும் தற்போது அமெரிக்க மக்கள் தொகையில் 70 மில்லியன் மக்கள் தூக்கம் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும் அந்த செய்தியானது மேலும் கூறுகிறது.

ஆடம்பரமாக வாழ பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது, ஆகையால் தன்னுடைய பணி நேரத்தினை (WORKING HOURS) தவிர மற்ற நேரங்களில் ஓவர்டைம் (OVERTIME) மற்றும் பகுதி நேர வேலைகள் பார்ட் டைம் (PART TIME) அதிகளவில் செய்கிறார்கள். ஆகையால் அவர்களின் தூக்க நேரமானது (SLEEPING HOURS) குறைந்து விட்டது. இவர்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கும் மேலாக வேலைகள் செய்கிறார்கள். அத்துடன் வேலை முடிந்து வீட்டிற்கு போனாலும் அலுவலக வேலையின் சில பகுதிகளை அங்கும் செய்கிறார்கள்.

மூன்றில் ஒரு அமெரிக்கர்கள் அதாவது 36 சதவீத அமெரிக்கர்கள் இரவில் தூக்கம் இல்லாமல் இருந்ததால், காலையில் வாகனம் ஓட்டிக்கொண்டு செல்லும் போது தூக்கி விடுகிறார்கள். இதனால் சாலை விபத்துக்கள் அதிகம் எற்படுகிறது. மூன்றில் இரண்டு அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் கவலைப்படுகிறார்கள். அமெரிக்க மக்களின் தூக்கத்தின் சராசரி விகிதமானது 6 மணி 40 நிமிடங்களாக இருந்தாலும், இவற்றினை விட குறைவாக தான் இவர்கள் தூக்குகிறார்கள்.

ஏக இறைவன் நமக்கு இரவு நேரங்களை ஓய்வு பெறும் காலமாகவும், அமைதியினை தேடிக்கொள்ளக்கூடிய நேரமாகவும் அமைத்து தந்துள்ளான். ஆனால் பணம் பணம் என்று அலையும் மேலை நாட்டினருக்கோ தூக்கம் என்பது இரவு நேரங்களில் இல்லாமல் ஆகிவிட்டது. ஆகையால் அலுவகத்திற்கு பணிக்கும் செல்லும் பல அமெரிக்கர்கள் தாங்கள் பணி புரியும் அலுவகத்தில் பணி நேரத்தில் தன்னுடைய மேஜையில் தலை வைத்து நன்றாக குறட்டை விட்டு தூக்கி விடுகிறார்கள். அத்தகைய தருணங்களில் அலுவலகங்களில் பணி முடக்கம் ஏற்பட்டு தயாரிப்புகள் குறைக்கின்றன, பல டாலர் மதிப்புள்ள பொருட்கள் நஷ்டம் அடைகின்றன. இதனால் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி மனஉளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள்.

பனிரெண்டு சதவீத அமெரிக்கர்கள் இரவு நேரங்களில் தூக்கமால் இருப்பதால் காலையில் சோம்பலாக இருப்பார்கள். ஆகையால் அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வர முடியாமல் போய் விடுகிறது. சரியான தூக்கமின்மையால் வேலையில் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை. இதனாலும் நிறுவனத்திற்கு பல கோடி டாலர்கள் நஷ்டம் ஏற்படுகிறது என்பதினை பற்றியும் அமெரிக்கா ஊடகத்துறையானது கருத்து தெரிவிக்கிறது.

இரவிலும் பகலிலும் நீங்கள் நித்திரை செய்(து இளைப்பாறிக்கொள்)வதும், (பூமியின் பல பாகங்களுக்குச் சென்று) நீங்கள் அவனுடைய பேரருளைத் தேடிக்கொள்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (கவனமாகச்) செவியுறும் சமூகத்தார்க்கு, இதில் நிச்சயமாக (ப் பல) அத்தாட்சிகளிருக்கின்றன. (அல்குர்ஆன் 30 : 23)

source: http://islam-bdmhaja.blogspot.in/

No comments:

Post a Comment