அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Friday, June 24, 2011

நாமும் நமது மரணமும்

மகத்தான ஆற்றல்கள் நிறைந்த அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: 'நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 4: 78)

அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் குறிக்கப்பட்ட விதி (அல் குர்ஆன் : 3:145)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் மரணம் நெருங்கி விட்டவருக்கு 'லா இலாஹ இல்லல்லாஹூ'என்ற திருக்கலிமாவைச் சொல்லிக் கொடுங்கள்.(அறிவிப்பவர்:அபூஸயீத் அல் குத்ரி (ரலி) முஸ்லீம் 1672)

மரணம்! நமது பிறப்போடு சேர்த்து அனுபப்பட்ட ஒரு வாழ்க்கைத் திட்டம். படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீர வேண்டிய கட்டாய வாழ்க்கைச் சுவை! இவ்வுலகத்திலிருந்து வேறு உலகத்திற்கு ஒவ்வொரு ஆன்மாவையும் பிரவேசிக்கச் செய்யும் ஒருவழிப்பாதை. தெய்வீக விசுவாசங்கள் திண்ணமாக உண்மையாகும் திடமான சம்பவமே மரணம்.

நிர்ணயிக்கப்பட்ட விதியாக இருக்கும் இம்மரணம் ஒவ்வொருவருக்கும் எங்கே வரும்? எப்போது நேரும்? எந்த ரூபத்தில் நிகழும்; என்பதை எவராலும் அறிய முடியாத விஷயமாக வல்ல இறைவன் ஆக்கி வைத்துள்ளான்.


மனிதர்களிடம் நிகழ்ந்தே தீரக்கூடிய சில விஷயங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாததாக அவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவையாக உள்ளன. உதாரணமாக பிறப்பும் இறப்பும்! ஏந்த மனிதனும் தான் விரும்பிய மாதிரி பிறக்கவோ, தான் விரும்பியபோது மரணிக்கவோ முடிவதில்லை. மாறாக, அவைகளெல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனின் கட்டுப்பாட்டில் மட்டுமே நடப்பவையாக உள்ளன. வேறெவராலும் இவற்றை நிகழ்த்த முடிவதில்லை. காரணம், இவைகளெல்லாம் மகத்துவமிக்க அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய, நிகழ்த்தக்கூடிய மறைவான ஞானங்களாகும் என்று அல்லாஹ் கூறுகிறான். 

ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார். கண்ணியமிக்க இரட்சகன் தனது திருமறையில் கூறும்போது, அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான் நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம் எங்கே? மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன் ( அல்குர்ஆன்: 31 : 34)

அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய இந்த விஷயங்கள், அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நிகழ்த்த முடிந்ததாகவும் உள்ளது. இவைகள் மனித இனத்தின் மீது விதிக்கப்பட்ட அடிப்படைகளாகவும் உள்ளன. பிறப்பு, இறப்பு, மழை, சம்பாத்தியம், மறுமை இவற்றை வேண்டாம் எனக்கூறி மனிதரில் எவரும் ஒதுக்கித் தள்ளவோ தப்பிக்கவோ முடியாது. ஒவ்வொருவரும் மேற்கூறிய விஷயத்தில் ஏக இறைவனின் உதவியையும், நாட்டத்தையும் பெற்றே தீர வேண்டிய கட்டாய நிலையிலுள்ளனர்.மனிதர்களில் பெரும்பாலோர் தங்களின் மரணத்தைப் பற்றி சிந்தனையில்லாமல் மனம் போன போக்கில் உலா வருகின்றனர். நொடிப்பொழுதில் மறைந்து விடும் உலகின் மீது மோகங்கொண்டு நிலையான மறுமையையும் மரணத்தையும் வெறுக்கின்றனர். யார் வெறுத்த போதும், விரும்பிய போதும் அல்லாஹ் வகுத்து வைத்திருக்கும் காலக்கெடு வந்துவிடுமாயின் அது தனி மனிதனாயினும் சமுதாயமானாலும் ஒரு வினாடி நேரம் கூட முந்தாமலும், பிந்தாமலும் மரணத்தை சந்திப்பார்கள். 

வல்ல நாயன் அல்லாஹ் கூறுகின்றான்,  ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள்,  பிந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 10:49)

மேலும், உயிரைக் கைப்பற்றும் விஷயத்தில் மக்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. உலகம் முழுமைக்கும் ஒரே ஒரு மலக்கைக் கொண்டு தான் உயிர் கைப்பற்றப்படுகிறது. அவர் பெயர் இஸ்ராயில். அவரைத்தான் அல்லாஹ் நியமித்திருக்கிறான். அவர் தான் உயிரைக் கைப்பற்றும் வானவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆதி மனிதரைப் படைப்பதற்காக அல்லாஹ் பூமியிலிருந்து மண்ணெடுத்து வரச் சொல்லி ஒவ்வொரு மலக்கையும் அனுப்புகிறான். அவர்களுக்கு பூமி மண் தர மறுத்தது. அல்லாஹ் 'இஸ்ராயிலை அனுப்பியபோது பூமி மறுத்தபோதும் மண் எடுத்துச் சென்றதாகவும் அதனால் மனிதர்களின் உயிரைக் கைப்பற்ற அவரையே அல்லாஹ் நியமித்து விட்டதாகவும் ஒரு கதை இஸ்லாமிய மக்களிடத்திலே நிலவுகிறது.

உண்மையில் 'இஸ்ராயில்' என்ற பெயரில் ஒரு மலக்கு இருப்பதாக திருக்குர்ஆனிலோ அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ எந்தக் குறிப்பையும் சான்றையும் காண முடியவில்லை. உண்மையில் ஒரே ஒரு மலக்கு தான் உலகம் முழுவதும் உள்ள அனைவரின் உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்த ஆதாரப்பூர்வமான சான்றையும் காண முடியவில்லை. மலக்குல் மவ்த் ஒருவர் தான் என்பதையும் அவர் பெயர் இஸ்ராயில் ' என்பதையும் இஸ்லாம் மறுக்கிறது. மறைவான ஞானங்களின் நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

உங்களுக்கென நியமிக்கப்;பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக்கொண்டு வரப்படுகிறீர்கள். (அல் குர்; ஆன் 32:11)

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்று உத்தரவு வருகிறதோ, அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று திருமறைக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் சான்று கூறுகின்றன.

இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமான எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இஸ்லாமிய சமுதாயம் இடந்தரக் கூடாது.

உயிர்பிரிந்தவுடன் இறந்தவரின் கண்களை மூடிவிடுவதும்

உம்முஸலமா(ரலி) அவர்கள் கூறியதாவது: (என் முதல் கணவர்) அபூஸலமாவின் (இறுதி நாளில்) அவரது பார்வை நிலைகுத்தி நின்றபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வந்து அவருடைய கண்களை மூடி விட்டார்கள். பிறகு உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைப்பின் தொடர்கிறது. என்று கூறினார்கள். (ஆகவே மரணமடைந்து விட்டவரின் கண்களை மூடி விடுங்கள். அப்போது அபூஸலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர்.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில் நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் 'ஆமின்' என்று கூறுகின்றனர் (மேலும் அபூஸலமா(ரலி) அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்) (முஸ்லீம் 1678)

நல்லோர்களின் உயிர்களை கைப்பற்றுதல்

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்வை அஞ்சி நன்மைகள் செய்து மறுமை வாழ்வே சிறந்தது என்று கூறி நல்லோராக வாழும் நிலையில் அவர்களின் உயிர் கண்ணியப்படுத்தப்படும். மகத்தான இரட்சகன் அல்லாஹ் கூறுகிறான்.

நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, 'உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்! என்று கூறுவார்கள் (அல்குர்ஆன்: 16:32)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைச் சந்திக்க யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் மரணத்தை வெறுக்கத்தானே செய்கிறோம் என்று கேட்டேன் அதற்கவர்கள் அவ்வாறு அல்ல. ஒரு மூஃமினுக்கு இறைவனின் அருள் அவனது சுவர்க்கம் அவனது திருப்தி பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். அல்லாஹ்வும் அவனைச் சந்திக்க விரும்புகிறான். ஒரு காஃபிர் அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி எச்சரிக்கப்பட்டால் அவன் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான். அல்லாஹ்வும் அவனது சந்திப்பை வெறுக்கிறான் என்று விளக்கமளித்தார்கள். (ஆயிஷா(ரலி) திர்மிதி 987)

மறுப்போரின் உயிர்கள்

படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்வின் அருட்கொடைகளை சுகித்துக் கொண்டு அவனை மதிக்காமல், பணியாமல் அல்லாஹ்வை மறுக்கும் தீயோர்களின் உயிர் கைப்பற்றப்படும்போது கடுமையான வேதனை செய்யப்பட்டு அவர்களின் உயிர் கைப்பற்றப்படும். அல்லாஹ்வை மறந்து உலகை அதிகம் நேசித்து எல்லா வகையான வாழ்வியல் அருட்கொடைகளை அல்லாஹ்விடமிருந்துப் பெற்றுக் கொண்டு நன்றிகெட்ட முறையில் அல்லாஹ்வை வெறுக்கின்றனர்;. அதுமட்டுமன்றி எந்த வேத ஆதாரமும் இல்லாமல் சான்றுகளும் இல்லாமல் அல்லாஹ்வைப் போன்று வேறு தெய்வமும் உள்ளது என கூறும் கொடுமையான இணைவைப்பைச் செய்த மறுப்போரின் உயிர்களை வானவர்கள் கடினமான வேதனைச் செய்து கைப்பற்றுவார்கள். 

திருமறையில் வல்ல அல்லாஹ், 
(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது,  சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்;! என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! நீங்கள் செய்த வினையை இதற்குக் காரணம், அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்லன் (அல் குர்ஆன்: 8: 50,51)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் இறந்து விட்டால் (அவர் மறுமையில் செல்ல வேண்டிய) இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கவாசியாகக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகவாசியாகக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் எழுப்பும் வரை இதுவே உனது தங்குமிடமாகும் என்று அவருக்குக் கூறப்படும். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) திர்மிதி 992)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் (இவா) ஓய்வு பெற்றவராவார். அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார் என்று சொன்னார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! ஒய்வு பெற்றவர் அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறைநம்பிக்கைக் கொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பங்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். பாவியான அடியான் (இறக்கும் போது) அவனின்; எல்லாவிதமான தொல்லையிலிருந்தும் மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள். மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்ற நிம்மதி) பெறுகின்றன. (அபூகதாதா ஹாபினுஸ் ரிப்யி (ரலி) முஸ்லிம் 1932)

கண்ணியமிக்க எல்லாம் வல்ல அல்லாஹூத்தஆலா தன் திருமறையில்:
தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன். நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாக தங்குவிர்;கள்.பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது. (அல் குர்ஆன்: 16:28,29)

நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் நாடு துறந்துச் சென்றோம்.எங்களுக்காகப் பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமலேயே (உலகைப் பிரிந்து) சென்று விட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர்(ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அவருக்கு கஃபன் அணிவிக்க   துணி ஒன்று மட்டும் (அவருடைய உடமைகளில்) கிடைத்தது. அதைக் கொண்டு அவரது தலைப்பகுதியை மறைத்தால் கால்கள் வெளியே தெரிந்தன. கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. ஆகவே அவரது தலைப்பகுதியை அந்தத் துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள் மீது இத்கீர் எனும் ஒருவகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டடார்கள். (அறிவிப்பவர்: கப்பாப் பின் அல் அரத்(ரலி) முஸ்லீம் 1715)

ஆகவே மரணத்தை பயந்து அல்லாஹ்வை அஞ்சி நடக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

Saturday, June 4, 2011

உண்மை வரிகள்....!

என்ன சொல்கிறாய் என்பதை விட என்ன செய்கிறாய் என்பதே நீ ...

நம்பிக்கை தான் பார்க்க முடியாத விஷயங்களுக்கு ஒரே ஆதாரம்...

பிரச்சனைகள் தான் மனிதர்கள் யார் என்று காட்டுகின்றன...

பொறுமையும் மனோதிடமும் எல்லாவற்றையும் வெற்றி கொள்ளும்...

உனது உயர்ந்த திட நம்பிக்கைகளுக்கு நீ உண்மையாயிரு...

மனிதனுடைய மிகப் பெரிய குறைபாடு என்பது அவநம்பிக்கைதான்...

உனது உயர்ந்த திட நம்பிக்கைகளுக்கு நீ உண்மையாயிரு...

நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது

உங்களைத் தவிர வேறு எதனாலும் உங்களுக்கு அமைதி தர முடியாது..

சந்தோசமாக ஏற்று கொள்ளும் போது சுமை தெரிவதில்லை...

மகத்தான விஷயங்கள் எப்பொழுதும
உங்களுக்குள்தான் ஆரம்பமாகின்றன..

ஒன்றை எந்த அளவு விரும்புகிறோமோ
அந்த அளவுக்கே அதைச் செய்கிறோம்...

தன் சொந்த இயல்போடு ஒத்திசைந்து
இருக்கும் வாழ்வே சந்தோசமானது...

எந்தத் துயரமும் காலத்தால் குறைக்கப்படாமல்
மிருதுவாக்கப் படாமல் போனதில்லை ..

நம்மில் நாம் திருப்தி காணவிட்டால்
அதை வெளியே தேடுவது பயனற்றது

மனதில் ஏற்படும் எத்தகைய பயங்களையும்
நீங்களாகவே முறியடித்துக் கொள்ள முடியும்

சரியான சந்தர்ப்பத்தில் பேசப்படும்
ஒரு வார்த்தை எவ்வளவு சிறந்ததாக இருக்கிறது

தயக்கத்தின் காரணங்களைப் புரிந்து கொள்ளும்போது
தயக்கம் தவிடுபொடியாகிறது

ஒரு மனிதனின் குணநலன்தான்
அவன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒருவர்...

உங்கள் ஆன்மாவை பொருத்தவரை
அதனால் இயலாதது என்று எதுவும் இல்லை

பலவீனமானவர்களின் வழியிலே தடைகல்லாய் இருப்பது
பலமுடையவர்களின் வழியிலே படிக்கல்லாகவே இருக்கும்...

திருப்தியான மனம் தான் உலகில்
ஒருவனக்குக் கிடைக்க கூடிய உயர்ந்த ஆசீர்வாதம்...

சிறப்பானவற்றை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால்
மோசமானவை ஒரு போதும் நிகழாது...

வாய்ப்பு என்பது உழைப்பென்னும் வேடமிட்டு
வருவதால் பலர் அதை தவறவிடுகிறார்கள்...

கைவிட நேரும் முயற்சி என்னைக் கலங்கடிப்பது இல்லை
அது முன்னேற்றத்திற்குப் படி அமைத்துக் கொடுக்கிறது...

முன்னேற்றத்திற்காக செய்யப்படும்
எந்த முயற்சியும் ஒரு போதும் வீணாவதில்லை...

நீங்கள் நேசிக்கப்பட வேண்டுமென்றால்
நேசிக்கப்படும் தன்மையோடு இருங்கள்...

உங்களுக்கு எது செய்யப்டக்கூடாது என்று விரும்புகிறிர்களோ
அதை அடுத்தவர்களுக்கு செய்யாதிர்கள்...

இயற்கையால் ஏற்றுக் கொள்ளும்படி
படைக்கப்படாத எதுவும் எவருக்கும் ஏற்படுவதில்லை...

தன்னைக் கையாள்வதில் உண்மையாக இல்லாத
எவராலும் உயர்ந்த விஷயங்களை உருவாக்க முடியாது...

நம் வீட்டின் கணப்பின் அருகே சந்தோஷம் விளைகிறது
அதை அறியாதவர்களின் தோட்டத்தில் அதைப் பறிக்க முடியாது...

முற்றிலும் புதியதாக ஆரம்பிப்பது அவமானமில்லை...
அது ஒரு வாய்ப்பு...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்...

நீங்கள் கைவிட்டால் தவிர எப்பொழுதும்... நீங்கள் தோற்பதில்லை...
எப்போது நீங்கள் நினைத்தாலும் புதிதாக நீங்கள் ஆரம்பிக்கலாம்...

அடுத்தவர்களைப் பார்த்து வாழும் வரை கவலை...
அச்சம்.. பொறாமை உங்களிடம் குடி கொண்டிருக்கும்...

அடுத்தவர்களின் பிழைகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்...
நமது தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஆயுள் கிடையாது...

நீ ஒருவரால் நேசிக்கப்படும் போது பலம் பெறுகிறாய்...
நீ ஒருவனை நேசிக்கும் போது தைரியம் அடைகிறாய்...

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல...
தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை...

தன்னைக் கையாள்வதில் உண்மையாக இல்லாத
எவனாலும் உயர்ந்த விஷயங்களை உருவாக்க முடியாது ...

வானத்தில் வல்லூறுகளுடன் பறக்க விரும்புபவன்..
வாத்துக்களோடு நீந்திக் கொண்டிருக்க கூடாது...

வாழ்வின் சோதனைகளைக் கடந்து மேலெழ உதவும் சமநிலை
தவிர பொறுமை என்பது வேறென்ன ?

தோல்வியடைவது கஷ்டமானது தான்...
ஆனால் வெற்றிக்கு முயற்சிக்காதது அதை விட மோசமானது...

எப்பொழுதும் அன்பாய் இருங்கள்... நேற்றைப் பற்றி கவலையும்...
இன்றைய... நாளைய பயமும் இருக்காது... அன்பு காலத்தைக் கடந்தது...

தோல்வி என்பது உங்கள் மன உறுதிக்கு வைக்கப்பட்ட சோதனை
என்பதை உணர்ந்தால் அடுத்த கட்டத்திற்கு எளிதில் செல்லலாம்...

நீங்கள் வெற்றியாளராக வேண்டுமானால் எப்போதும்
பிறரோடு உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்கக் கூடாது...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்...

இன்றைய தினத்தை புதிய நாளாக மாற்றுங்கள்...
நாளைய தினம் ஆக்கப்பூர்வமான பொழுதாக விடியும்...

நம்பிக்கை இன்றி மனிதனால் எதுவும் செய்ய முடியாது...
நம்பிக்கை இருந்தால் எல்லாமே சாத்தியம்...

உங்களுக்கு எது செய்யப்பட கூடாது என்று விரும்புகிறிர்களோ...
அதை மற்றவர்களுக்கு செய்யாதிர்கள்...

சிந்திக்காத மனிதன் தனக்கு மட்டும் துரோகம் செய்வதில்லை...
மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்...

உற்சாகத்தோடு யாரும் பிறப்பதில்லை...
உற்சாகத்தைத் தன்னுடைய இயல்பாக
ஆக்கிக் கொள்பவர்களே உயர்கிறார்கள்...

உன்னதமானவன் வாழ்வின் விபத்துக்களை அழகுடன்
பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டு
அந்த சூழலில் சிறப்பானதைச் செய்கிறான்...

உலகெல்லாம் அறியாமையில் மூழ்கி கிடந்தால்
மட்டுமே தான் ஒரு அறிஞ்சனாக பிரகாசிக்க முடியும்
என்பது மிகவும் இழிவு நிலை கொண்ட எண்ணம் ...

உங்களை நீங்களே தூய்மையாக
பிரகாசமாக வைத்து கொள்வது நல்லது...
உலகை நீங்கள் காண உதவும் ஜன்னல் நீங்கள் தான்...

அச்சம் வரும்போதேல்லாம் நம்பிக்கை கொள்ளுங்கள்...
நம்பிக்கையின் உயரம்... அச்சத்தின் உயரத்தை விட அதிகமாய்
இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்...

உங்கள் வாழ்கைக்குள் வருகின்ற ஒவ்வொரு மனிதரும்...
ஒன்று உங்களுக்கு எதாவது கற்றுகொடுக்க வந்திருக்கிறார்...
அல்லது - உங்களிடமிருந்து எதாவது கற்று கொள்ள வந்திருக்கிறார் ..

சோம்பேறித்தனம் என்பது பணம் மாதிரி...
உங்களிடம் அது நிறைய இருக்க இருக்க மேலும் மேலும்
வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்...

சந்தோஷத்தைத் தேடி இந்த உலகில் அலைகின்றனர்
அது உங்கள் கைகெட்டும் தூரத்தில் இருக்கிறது
திருப்தியான மனம் எல்லாருக்கும் அதைத் தருகிறது...

நம்முடைய காலகட்டத்தில் புனிதத்துவத்தை
நோக்கிச் செல்லும் பாதை செயல் உலகின்
ஊடகச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம்...

நேற்று செய்யவேண்டியதை இன்று செய்தால்... சோம்பேறி...
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால்... சுருசுறுப்பானவர்...
நாளை செய்ய வேண்டியதை இன்று செய்தால்... வெற்றியாளர்...

உங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை
நீங்கள் அறிந்து கொள்ள ஒரே வழி
இடைவிடாது முயற்சி செய்து கொண்டிருப்பது தான்

சிரமங்களை இரண்டு விதமாய் எதிர்கொள்ளலாம்
சிரமங்களை சரி செய்வது அல்லது
அதை எதிர்கொள்ளும் விதமாய் நம்மை சரி செய்வது...

நீங்கள் எதை இழந்தீர்கள் என்பதல்ல...
உங்களிடம் என்ன மிச்சமிருக்கிறது
என்பது தான் முக்கியம்...

எதிர்பாராமல் ஏற்படுகிற பின்னடைவை சரியாக ஆராய்ந்தால்...
அது எதிர்கால வெற்றியை வரையறை
செய்யும் வாய்ப்பாக அமைகிறது...

சந்தோசத்திற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...
அது நமது எல்லைக்கு உட்படாதவற்றைப் பற்றி
கவலைப்படுவதை நிறுத்துவது...

அடுத்தவர்களைப் பற்றி நாம் சிந்தித்து
அவர்களுக்காக எதாவது செய்யாவிட்டால்...
சந்தோசத்திற்கான சிறந்த வழியை இழந்து விடுகிறோம்...

உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை
சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...
பிறகு வருவதை எதிர்கொள்ளுங்கள்...

சந்தோஷத்தின் ஊற்றை தனக்குள்ளே அதிகம் காணக் காண மனிதன்
அதிக இன்பமடைவான்... மிக உயர்ந்த... பல தரப்பட்ட...
நீடித்திருக்கும் இன்பங்கள் மனத்திலிருந்து எழுபவையே...

தன் தவறுகளைத் திருத்திக் கொண்டு தன்னைத் தொடர்ந்து
புதிய மனிதனாக மாற்றிக் கொள்வதில் தான்
மனிதனின் நல்ல குணம் இருக்கிறது...

புதிய சிந்தனைகளை... வேதங்களை தேடி ஓடாதிர்கள்...
உங்களுக்குள்ளேயே உருவாக்குங்கள்..
அதுவே உங்களை உலகத்திற்கு அடையாளம் காட்டும்...

உன் நோக்கம் என்ன என்பதில் தெளிவாக இரு...
அதற்கு நேர்மாறானவர்களுடன் நேரத்தை வீணாக்காதே...
நோக்கத்தை நோக்கி செயல்படு...

பெரும்பாலான சோதனைகளில் முக்கிய துன்பம் என்பது
நாம் உண்மையில் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பதல்ல...
நாம் எவ்வளவு எதிர்க்கிறோம் என்பதில் தான் இருக்கிறது...

ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ளத் தேவைப்படுவது
எதுவென்றால் அவர் தன்னுடைய உணர்வு நிலையைத்
தானாகவே மாற்றிக் கொள்வது தான்...

தனக்குத் தானே உதவி கொள்ளாமல் எவராலும்
அடுத்தவருக்கு உதவ முடியாது என்பது
உலகின் மிக அழகிய இயல்புகளில் ஒன்று...

உங்கள் கற்பனை எவ்வளவு வலிமை பொருந்தியதாக
உங்களை கனவு காணசெய்கிறதோ...
அதுவே நனவுகளை முன்னோக்கி
மனத்திலே வடிவமைத்து கொடுக்கிறது...

அதுத்தவர்களுக்கு நன்மை செய்வது கடமையல்ல
அது ஒரு சந்தோஷம்...
ஏனெனில் அது உங்கள் சொந்த ஆரோக்கியத்தையும்
சந்தோசத்தையும் அதிகரிக்கிறது...

உன்னுடைய பலம் எது பலவீனம் எது
என்று பட்டியலிடுவதை விட
பலத்தை மேன்மேலும் அதிகப்படுத்தும் போது
பலவீனம் காணமல் போகிறது...

சோம்பலுக்கு முன்னால் விலைமதிப்புள்ள
வாய்ப்புக்கள் பயனில்லாதவை...
ஆனால்.. கடுமையான உழைப்புக்கு முன்னால் மிக சிறிய
வாய்ப்புக்கள் கூட விலை மதிப்புள்ளவை...

சிக்கல்களை... சிக்கல் என்று நினைக்கும் போது
அவை பெரிதாகத் தோன்றும்...
சிக்கல்களை சவால்கள் என்று கருதும்போது...
எதிர்கொள்ளும் உந்து சக்தி உருவாகும்...

நாளையை நிறைவேற்றுவதில் உள்ளே
ஒரே தடை நமது இன்றைய சந்தேகங்கள் தான்
வலிமையான செயல்பூர்வமான
நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறுவோம்...

மற்றவர்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தியதில்
இருந்து புதியதாகச் செய்ய பார்...
நீ எதை அடைய விரும்புகிறாயோ அதற்கு
அதை ஒத்துப் போகச் செய்வதில்தான் நீ வெளிபடுகிறாய்...

இந்த வாழ்வில் மன்னிக்க எதாவது
உங்களுக்கு இருந்தால் உடனே மான்னியுங்கள்...
மன்னிக்காமல் போவதை விட
மெதுவாக மன்னிப்பது மேலானது ...

எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும்போது
வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம்
என்று பலருக்குத் தெரிவதில்லை...
எனவே தோல்வியைத் தழுவுகிறார்கள்...!

உங்களிடம் ஏற்கனவே என்ன இருக்கிறது என்ன இல்லை
என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருகாதிர்கள்...
உங்களிடம் இருப்பதில் சிறந்தது இல்லாவிட்டால் அதை
எவ்வளவு ஆவலோடு தேடுவீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்...

முக்கியமான ஒவ்வொரு அனுபவமும்
பின்னடைவாகக் கருதப்படலாம்... அல்லது
புது வகையான முன்னேற்றத்திற்கான
ஆரம்பமாகக் கருதப்படலாம்...

எதிர்காலத்தில் நேரம் கிடைத்தால் ஒருநாள் சந்தோசமாக இருப்போம்
என்று பலர் தங்கள் வாழ்வை எதிர்பார்ப்பிலேயே கழித்துக்
கொண்டு இருக்கிறார்கள்... ஆனால் நிகழ்காலம் மற்ற காலத்தை விட
ஒருவகையில் மேலானது... அது நம்முடையது ...

வாழ்கையில் போராடுகிற ஒவ்வொரு மனிதனுக்கும்...
வெற்றிக்கான உத்வேகத்தை தருவதும்...
அந்த வெற்றி சத்தியத்தின் வழயில் இருக்க செய்வதும்
நம் ஒவ்வொருவருக்கும் உள்ள உடனடி கடமை...

நீங்கள் முடிவு எடுத்திருக்கிறிர்கள் என்பதன் அடையாளம்
உங்கள் செயல் மாறியிருக்க வேண்டும்...
உங்கள் செயல் மாறவில்லை என்றால்
உண்மையில் நீங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை...

கடலில் நீண்டிருக்கும் நிலத்தைப் போல் நீங்கள் இருக்க வேண்டும்..
அதன் மேல் அலைகள் தொடர்ந்து மோதினாலும்
அது உறுதியாக நிற்கிறது .
அதன் மேல் மோதும் ஆர்பரிக்கும்
அலைகள் அடங்கி அமைதியாகின்றன...

நமக்கு நன்றாக தெரிந்ததை...
சரியென்று புரிந்ததை செய்ய கூட பலர் துணிவதில்லை
ஆனால் துணிந்து இறங்கும் போது
நம்பிக்கை பல மடங்கு பெருகுவதோடு
நினைத்ததை விட மகத்தான வெற்றி பெற முடியும்...

உங்களால் பறக்க முடியவில்லையா ? ஓடுங்கள் ...
உங்களால் ஓட முடியவில்லையா ? நடங்கள் ...
உங்களால் நடக்க முடியவில்லையா ? தவழுங்கள் ..
ஆனால் ,எதைச்செய்தாலும்
உங்கள் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருங்கள் ..

எப்பொழுது உங்களால் கண்களுக்கு
தெரியாதனவற்றை பார்க்க முடிகிறதோ
எப்பொழுது நம்பமுடியாதவற்றை செய்ய முடியும் என்ற நம்பிக்கை
உங்களுக்கு வருகிறதோ... அப்பொழுது எதை உங்களால் முடியாது என்று
உலகம் சொல்கிறதோ... அதை நீங்கள் செய்து முடிப்பீர்கள்...

ஒரு மனிதன் வெளியே செய்வது
உள்ளே நினைப்பதன் வெளிபாடுதான்...
செயல் திறனோடு வேலை செய்ய...
அவன் தூய்மையாக யோசிக்க வேண்டும்...
மேலாக நடந்து கொள்ள... மேலாக சிந்திக்க வேண்டும்...

எங்கு படித்து இருந்தாலும் சரி.. அல்லது யார் சொல்லி இருந்தாலும் சரி..
அது முக்கியமில்லை அவற்றை நம்பாதே
அது நான் சொல்லி இருந்தாலும் கூட
உன்னுடைய அறிவுக்கும் உனக்கு உள்ள
பொதுமையான உணர்வுக்கும் ஒத்து வராவிட்டால்...

ஒரு முயற்சி போதும்...!
முயற்சிகள் தொடங்க ஒரு மரம் போதும்...
வானம் ஒன்று தொடங்க ஒரு மனது போதும்...
உத்வேகம் வழங்க ஒரு முடிவு போதும்...
இலட்சியம் வகுக்க...!

பிரபஞ்சத்துடன் மனிதனக்குள்ள ஒற்றுமை பற்றி
எனக்கு சந்தேகமில்லை... காரணம் கடந்த உணர்வு அது...
அது ஒரு மனிதனின் இதயத்தில்
இருந்த நம்பிக்கையின்மையை
தொட்டு அதை வேரோடு அழித்தது...

முதிர்ச்சி அடைவதில் மிக முக்கியமான கட்டங்களில் ஒன்று
சுயநலத்திலிருந்து அடுத்தவரை புரிந்து கொள்ளும் நிலைக்கு வளர்வது....
அடுத்தவர்களுக்கு ஒருவனாக தன்னை பார்க்காமல்...
தனக்கு அடுத்தவர் செய்ய விரும்புவதை
அடுத்தவர்க்கு செய்யாமல் ஒருவன் முதிர்ச்சி அடைவதில்லை...

தீர்மானமான தேவையற்ற வேகம் இல்லாமல்
முன்னேறுபவனுக்கு எந்தப் பாதையும் நீண்டதில்லை...
பொறுமையோடு வெற்றிக்காக
தன்னைத் தயார் செய்து கொள்பவனக்கு
அது தொலைவில் இருப்பதில்லை...

சந்தேகத்துடனோ அவநம்பிக்கையுடனோ
பயத்துடனோ நாம் அணுகினால்
நீடித்த அமைதியை நாம் பெற முடியாது...
பொறுப்பினால் ஏற்படும் புரிதல்...நம்பிக்கை..
தைரியத்துடன் நாம் முயன்றால் தான் அதை அடைய முடியும்...

இந்த உலகில் நான் ஒருமுறைதான் வலம் வருவேன்...
எனவே யாருக்காவுது எந்த நன்மையாவுது செய்ய முடிந்தால்...
யாருக்காவுது எதாவுது அன்பை என்னால் காட்ட முடிந்தால்...
நான் இப்பொழுது செய்து விடுகிறேன்...
தள்ளி போடவோ ஒதுக்கவோ கூடாது...
ஏன் எனில் இந்த வழியாக நான் மறுபடி போக முடியாமல் போகலாம்...

எவன் ஒருவன் மனதிற்கு ஒரு உந்துதலை கொடுக்கும் சக்தி பெற்று
எப்பொழுதும் மனதை ஊக்குவிக்கும்
எண்ணங்களாலேயே நிரப்பி கொள்கிறானோ
நம்பிக்கை மிகுந்த எண்ணங்களை..
உற்சாகமூட்டும் எண்ணங்களை நிரப்பி கொள்கிறானோ..
அவன்.. வாழ்க்கையின் ஒரு பெரும் புதிரை விடுவித்தவனாவான்...

உலகங்களே உங்களை அறிந்திருக்கும்
அறிவு கூட மேலோட்டமான அறிவு தான்
மற்றவர்கள் உங்களை குறைவாக எடைபோட்டால்
அதற்காக வருந்தாதிர்கள்...
உரிய நேரத்தில் உங்கள் செயல்திறன் வெளிப்படும் போது தான்...
உலகுக்கும் உங்களுக்கும்... உங்களை பற்றி தெரிகிறது...

இறுக்கமான சூழலை எதிர்கொண்டு
எல்லாமே உங்களுக்கு எதிராக இருந்தால்...
இன்னும் ஒரு நிமிடமும் நீடிக்க முடியாது என்று
தோன்றினால் கூட கைவிட்டு விடாதிர்கள்...
ஏனெனில் அந்த இடத்தில்..
அந்த நேரத்தில் தான் வாழ்வு திசை திரும்பும்...

நம்முடைய ஆர்வத்தை இழக்கும் நிலைமை பற்றி
நாம் எச்சரிக்கையாக இருப்போம் எதாவது ஒன்றில்
நாம் எப்பொழுதும் பெருமைக்குரியவர்களாகவே இருப்போம்
எதுவெல்லாம் நம்மை உயர்ந்த நிலைமைக்கு உள்ளாக்குகிறதோ
அதற்கான பாராட்டுதலை பெறுவதற்கு முயற்சி செய்வோம்...
அதில் நாம் காட்டும் ஆர்வம் தான் நம்முடைய வாழ்க்கையை
வளமடைய செய்து அழகுபடுத்துகிறது

பல ஆறுகள்.. விண்ணில் இருந்து மழை..
பல மருத்துவ குணமுள்ள நதிகள் போய் சேர்ந்தாலும்
கடலின் சுவை மாறுவதில்லை...
அதே போல் தைரியமுள்ளவன் நின் மனத்தை
சோதனையின் கனம் தாக்குவதில்லை..
அது தன் சமநிலையை நீடித்து இருக்கிறது..
ஏன் எனில் அது வெளி சுழலை விட
அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது...

வாழ்க்கை நம் மீது சில நேரம் பூக்களை வீசும்...
சில நேரம் பந்துகளை வீசும்...
பூக்கள் வீசினால் வைத்து கொள்ளுங்கள்...
பந்துகள் வீசினால் விளையாடி கொள்ளுங்கள்...
பாறாங்கற்களை வீசினால் விலகி கொள்ளுங்கள்...
மற்றவர்கள் உங்களை விமர்சிக்கும் போது
உங்கள் பலங்களை நினைத்து கொள்ளுங்கள்
மற்றவர்கள் உங்களை புகழும் போது
உங்கள் பலவீனங்களை நினைத்து கொள்ளுங்கள்...

சோதனைகளைக் கடந்து செல்வது...
ஒரு வெற்றியிலிருந்து இன்னொரு வெற்றி பெறுவது...
புதிய ஆசைகளை உண்டாக்குவது...
அவை நிறைவேறுவதைப் பார்ப்பதைவிட
வாழ்வில் சந்தோசமானது வேறில்லை...
உயர்ந்த.. பாராட்டதக்க முயற்சியில் ஈடுபட்டு
பாடுபடுபவனுக்கு சோர்வுகள்...
நம்பிக்கையினால் களைகின்றன...
பின்னர் சந்தோஷம் வந்து சேர்கிறது...
பிரச்சனைகளோடு போராடி அவற்றை
வெல்வது தான் மனிதத் திறமையின் உச்சகட்டம்.

Sunday, May 22, 2011

கனிவாக நடந்துக் கொள்வோம்

M.T.M.ஹிஷாம் (ஸலபி, மதனி)

“கனிவு” என்ற வார்த்தைக்கு அறபியில் “அர்ரிப்க்” என்று சொல்லப்படும். இவ்வார்த்தையின் பொருளை அறபு மொழி அடிப்படையில் நோக்குகையில் அதன் பொருளானது “உடன்படுதல், ஒரு விடயத்தினை கலவரமின்றி அணுகுதல்” ஆகிய விளக்கங்களைக் கொண்டதாக இருக்கும். இதே கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, “நிச்சயமாக அல்லாஹூத்தஆலா அனைத்து விடயங்களிலும் கனிவை விரும்பக்கூடியவனாக உள்ளான்” என நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும், அறிஞர் “லைஸ்” அவர்கள் கூறும் போது: “கனிவென்பது, ஒருவர் தம் அயலவரோடு கனிவாக நடந்து கொள்வதும், அவர்களுடன் நல்ல பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பதுமாகும்” என்கிறார்.

மேலும், இவ்வார்த்தயை இஸ்லாமியப் பரிபாசையின் அடிப்படையில் நோக்குகையில் அதன் விளக்கமானது பின்வருமாறு அமையும்: “ஒருவர் தம் அயலவருடன் சொல்லாலும் செயலாலும் கனிவாக நடந்து கொள்வதும், அவர்களுடன் இலகுவான நடைமுறைகளைக் கையாளுவதுமாகும்.” – பத்ஹூல் பாரி: 10ஃ449 , தலீலுல் பாலிஹீன்: 3ஃ89

ஒரு முறை “ஸூப்யானுஸ் ஸவ்ரி” (ரஹ்) அவர்கள் தனது தோழர்களை நோக்கி: “கனிவு என்றால் என்ன?” என்று வினவினார்கள். அதற்கு தோழர்கள்: “அபூ முஹம்மதே நீங்கள் கூறுங்கள் எனக் கூறினார்கள்.” அப்போது இமாமவர்கள்: “அந்தந்த விடயங்களை அதனதன் இடத்தில் மேற்கொள்வதாகும்” என பதிலளித்துவிட்டு, அதனை பின்வருமாறு விளக்கினார்கள். “கடினமாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் கடினமாக நடந்து கொள்வதும், மென்மையாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் மென்மையாக நடந்து கொள்வதும், வாளேந்திப் போராட வேண்டிய இடத்தில் வாளேந்திப் போராடுவதும், சாட்டையைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் சாட்டையைப் பயன்படுத்துவதுமே கனிவாகும்” என விளக்கினார்கள்.

கனிவு பற்றி அல்குர்ஆனில்…

அல்லாஹ் கூறுகின்றான்.
(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (இரக்கமுள்ளவராக) நடந்து கொள்கிறீர்: மேலும் , சொல்லில் கடுகடுப்பானவராக இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள் ஆகவே அவர்(களின் பிழை)களை நீர் மன்னித்து (அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிக்கக் கோருவீராக! – ஆல இம்றான்: 159

மேலும், அல்லாஹ் பிறிதோர் இடத்தில் கூறும் போது

“நீங்கள் இருவரும் பிர்அவ்னிடம் செல்லுங்கள், நிச்சமயமாக அவன் மிக்க வரம்பு கடந்து விட்டான்” ஆகவே நீங்கள் இருவரும் கனிவான சொல்லை அவனுக்குச் சொல்லுங்கள் அதனால் அவன் நல்லுபதேசம் பெறலாம் அல்லது அச்சமடையலாம் (என்று அல்லாஹ் கூறுகிறான்.) -தாஹா: 43,44

கனிவு பற்றி ஹதீஸ்களில்…

* -”புகாரி” மற்றும் “முஸ்லிம்” ஆகிய கிரந்தங்களில் “மாலிக் இப்னு அல் ஹூவைரிஸ்” (ரழி) அவர்களின் அறிவிப்பில், சில ஸகாபாக்கள் நபியவர்களிடத்தில் 20 நாட்கள் தங்கியிருந்து மார்க்கக் கல்வியினை கற்றுக் கொண்டு தமது கோத்திரத்தினரிடம் திரும்பிச் செல்ல நாடியபோது, தாம் இவ்வளவு காலமும் நபியவர்களிடத்தில் கழித்த நாட்களில் நபியவர்கள் தங்களுடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதைப்பற்றிக் கூறும் போது: “அவர் அறிவாளியாகவும் கனிவானவராகவும் இருந்தார்” எனக் கூறினார்கள்.
* -நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக கனிவைக் கடைபிடிக்கும் எல்லா விடயங்களிலும் அழகு தென்படும், அது புறக்கணிக்கப்படும் எல்லா விடயங்களிலும் அசிங்கம் தென்படும்” அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) ஆதாரம்: முஸ்லிம்
* நபியவர்கள், இந்த உம்மத்திற்கு தலைமை தாங்கக் கூடிய தலைவர்களுக்காகப் பிரார்த்திக்கும் போது… “இறைவா! எவர் எனது உம்மத்தின் பொறுப்பை ஏற்று, அவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறாரோ அவருக்கும் கஷ்டத்தைக் கொடுப்பாயாக! மேலும், எவர் எனது உம்மத்தின் பொறுப்பை ஏற்று அவர்களுடன் கனிவாக நடந்து கொள்கிறாரோ அவருடனும் நீ கனிவாக நடந்து கொள்வாயாக!” என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) ஆதாரம்: முஸ்லிம்
* கனிவாக நடந்து கொள்ளக்கூடிய சுபாவம் படைத்தவர்கள் பற்றி நபியவர்கள் கூறும் போது….. “எவருக்கு கனிவாக நடந்து கொள்ளக்கூடிய தன்மை கொடுக்கப்பட்டுள்ளதோ, அவருக்கு நலவில் இருந்தும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எவருக்கு கனிவாக நடந்து கொள்ளக்கூடிய தன்மை கொடுக்கப்படாது தடுக்கப்பட்டுள்ளதோ அவருக்கு நலவில் இருந்தும் ஒரு பங்கு தடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரழி) ஆதாரம்: திர்மிதி

கனிவு பற்றி அறிஞர்களின் கூற்றுக்கள்…

* “அபூ தர்தா” (ரழி) அவர்கள்: “ஒருவரிடத்தில் மார்க்க அறிவுள்ளது என்பதற்கு சிறந்த அடையாளம் அவர் தனது வாழ்வில் கனிவாக நடந்து கொள்வதாகும்.”
* “ஹிஷாம் இப்னு உர்வா” (ரழி) அவர்கள் தனது தந்தையைத் தொட்டும் அறிவிக்கையில்: “ஞானத்தில் இருந்தும் எழுதப்பட்டுள்ள விடயமாவது: “கனிவு ஞானத்தின் தலையாய அம்சமாகும்.”
* “கைஸ் இப்னு அபீ ஹாஸிம்” (ரழி) அவர்கள்: “எவருக்கு உலகில் கனிவாக நடந்து கொள்ளக்கூடிய பாக்கியம் கொடுக்கப்பட்டுள்ளதோ, அது அவருக்கு மறுமையில் பிரயோசனமளிக்கும்.”
* “வஹ்ப் இப்னு முனப்பிஹ்” (ரழி) அவர்கள்: “கனிவு அறிவுடன் இணைந்திருக்கும்.”
* எம்முன்னோர்களில் சிலர் கூறுகையில்: “ஈமானை அறிவு அலங்கரிக்கும் போது ஈமான் சிறப்படையும், அறிவை செயல் அலங்கரிக்கும் போது அறிவு சிறப்படையும், செயலை கனிவு அலங்கரிக்கும் போது செயல் சிறப்படையும், அறிவும் கனிவான சுபாவமும் இணைந்திருப்பதைவிட சிறந்தது எதுவும் இருக்கமுடியாது.”

கனிவாக நடப்பதால் உண்டாகும் அநுகூலங்கள்

* கனிவு சுவனத்தின் பால் இட்டுச் செல்லும்.
* கனிவு பூரணமான இஸ்லாத்திற்கும் ஈமானுக்கும் அடையாளமாகத் திகழும்.
* அல்லாஹ்வுடைய மற்றும் மனிதர்களுடைய அன்பு கிடைக்கும்.
* மனிதர்களுக்கு மத்தியில் அன்பு நிலவும்.
* கலவரமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கலாம்.
* இன்மை மறுமை இன்பத்திற்கு உருதுணையாக இருக்கும்.
* ஒருவனின் மார்க்க அறிவுக்கும் நற்பழக்கவழக்கங்களுக்கும் சிறந்த ஆதாரமாகத் திகழும்.

Sunday, May 15, 2011

அல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்!

வணங்கத் தகுதியான ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

இஸ்லாத்தின் பார்வையில் அனைத்து வணக்க வழிபாடுகளையும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யவேண்டும். மனிதன் உள்ளத்தினால் செய்யக் கூடிய மிக முக்கியமான வணக்கங்களில் ஒன்றுதான் இறைவன் மீது தவக்குல் வைத்தல். இறைவனை சார்ந்திருத்தல் என்ற பொருளை உடையது. தவக்குல் என்பது அல்லாஹ்வை தனது உள்ளத்தினால் பூரணமாக உண்மைப்படுத்தி அதனை ஏற்றுக் கொண்டு அவனிடமே நமது தேவைகளை பொறுப்புச் சாட்டி அதற்குரிய காரணிகளை இனங்கண்டு செயல்படுத்துவதாகும்.

உதாரணமாக, விவசாயம் செய்கின்ற ஒருவர் தனக்கு சிறந்த முறையில் பயிர் கிடைக்கும் என்று மாத்திரம் இறைவன் பால் தவக்குல் (நம்பிக்கை) வைப்பது தவறாகும் மாறாக, தனக்கு சிறந்த பயிர் கிடைகும் என்ற உருதியான நம்பிக்கையுடன் இறைவன்பால் தவக்குல் வைத்து பொறுப்புச் சாட்டிவிட்டு அதற்குறிய காரணிகளாகிய பயிர் செய்கையை பராமரித்த்ல், சீர் படுத்தல், நீர்ப் பாய்ச்சல், கிருமிநாசிக்குரிய மருந்தடித்தல் இன்னும் பல காரணிகளை செய்வதன் மூலமே இறுதியில் சிறந்த விளைச்சல் அவனுக்கு கிட்டும். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கின்ற ஒருவன் ஏனய விஷயங்களையும் இது போன்றே மேற்கொள்ள வேண்டும். தவக்குலை பற்றி திருக்குர் ஆனில் பல இடங்களில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.

“…சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்” (03:159)

“நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்” (08:64)

“எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்” (25:58)

“எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் – திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்” (65:3)

மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் அனைத்துமே இறைவன் மீது தவக்குல் வைக்க வேண்டும் என்பதனை திட்டவட்டமாக தெளிவு படுத்துகின்றன.

நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்வில் இறைவனை முழுக்க முழுக்க நம்பியிருந்தாலும் தான் வைத்திருந்த அந்த நம்பிக்கையை இறைவன்பால் பொறுப்புச் சாட்டி இருந்தாலும் அதற்குறிய காரணிகளை இனங்கண்டு அவற்றை செய்து வந்தார்கள். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தின் போது தன்னை இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை இருந்தாலும் கூட இணைவைப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்குறிய காரணிகளை இனங்கண்டு செயல்படுதினார்கள். அவர்கள் மக்காவிலிருந்து மதீனவுக்கு செல்லக்கூடிய திசை வடக்கு பக்கமாகும்.

ஆனாலும் இணைவைப்பாளர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக ஒரு யூதனை பாலைவன வழிகாட்டியாக கூலிக்கு அமர்த்திக் கொண்டு, செல்ல வேண்டிய திசையை மாற்றி தெற்கு திசையாக மதீனாவை சென்றடைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏன் தெற்கு திசையை தேர்ந்தெடுக்க வேண்டும்? யூதன் ஒருவனை ஏன் பாலைவன வழிகாட்டியாக ஏன் கூலிக்கு அமர்த்த வேண்டும்? இவை அனைத்தும் நாம் இறைவனை சார்ந்து இருப்பதுடன் சார்ந்திருக்கும் செயலில் வெற்றிக்குரிய காரணிகளை இனம்கண்டு செயல்பட வேண்டும் என்பதனை தெளிவு படுத்துகின்றது.

இதே போன்று தான் ஏனய விஷயங்களுக்கும் உதாரணமாகும். இவ்வாறு சிறந்த முறையில் இறைவனை சார்ந்திருந்து நமது காரியங்களுக்குரிய காராணிகளை இனம் கண்டு செயல்படுத்தினால் நிச்சயாமாக அல்லாஹ் நமக்கு அவற்றை எளிதாக்குவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நீங்கள் உண்மையான முறையில் இறைவனை நம்பியிருந்தால், (தவக்குல் வைத்தால்) காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் எவ்வாறு ஒரு பறவை தனது கூண்டிற்கு திரும்புகின்றதோ அதற்கு உணவளிப்பதை போன்று உங்களுக்கும் உணவளிப்பான்” என்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், திரிமிதி)

ஒரு உடம்புக்கு எவ்வாறு தலை அவசியமோ அதே போன்று இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றிருக்கின்ற ஒருவனுக்கு அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பது அவசியமாகும். தவக்குல் மிகப் பெரிய வணக்கங்களில் ஒன்றாகும். இதனாலேயே ஏனைய மார்க்கத்தை ஏற்றிருப்பவர்களை விடவும் முஸ்லிம்களை அல்லாஹ் பிரித்து காட்டுகின்றான். எவனொருவன் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கவில்லையோ அவன் இறை நிராகரிப்பாளனாக மாறிவிடுகின்றான். எவனொருவன் அல்லாஹ்வுடன் சேர்த்து இன்னொருவரை தவக்குல் வைக்கின்றானோ அவன் இணைவைப்பாளனாக மாறுகின்றான். எவரொருவர் அல்லாஹ்வின் மீது மட்டும் தவக்குல் வைத்து அவனையே சார்ந்து இருக்கின்றாரோ அவன் ஏகத்துவவாதியாவான். அவனையே அல்லாஹ் விரும்புகின்றான்; பொருந்திக் கொள்கின்றான். ஏனெனில் இஸ்லாதின் அடிப்படை வணக்க வழிமுறையை அவன் செயல் படுத்துபவனாவான்.

தவக்குலில் இரண்டு விஷயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. அவைகளாவன:

1.
அல்லாஹ்வின் மீது மாத்திரமே தவக்குல் வைத்தல்.
2.
தவக்குல் வைத்த விஷயத்தின் கரணியை இனம் கண்டு செயல்படுத்தல்..

இதனடிப்படையில் இறைவன் மீது மாத்திரமே தவக்குல் வைக்க வேண்டும். ஒருவன் ஒரு காரியத்தை செய்கின்ற போது அல்லாஹ் அல்லாதவர்களை நம்பிக்கை வைத்து அவர்களையே சார்ந்து இருந்தால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவனாக மாறிவிடுகின்றான்.

ஜாஹிலியா கால அரேபியர்கள் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது தங்களது தேவைகளை பொறுப்புச் சாட்டினார்கள்; நம்பிக்கை வைத்திருந்தார்கள். சிலைகளிடத்திலும், கற்களிடத்திலும், மரங்களிடத்திலும் தங்களது தேவைகளை முறைப்பாடு செய்தார்கள். அவற்றையே நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவைகள் தங்களது தேவைகளை நிறைவேற்றும் என்றும், தங்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளை தடுத்து நன்மைகளை நிறைவேற்றித்தரும் என்று உறுதியாக நம்பியிருந்தார்கள். இன்னும் சிலர் அவற்றுடன் சேர்த்து அல்லாஹ்வையும் நம்பியிருந்தார்கள். அவைகள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். இதனாலேயே இவர்கள் அனைவருமே அல்லாஹ்வுக்கு இணைவைப்பாளர்களாக மாறிவிட்டார்கள்.

இதே போன்றூதான் தற்காலத்தில் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்கின்றவர்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவ்லியாக்களையும் தங்கள்மார்களையும், ஷேக்மார்களையும் முழுமையாக நம்பிக்கை வைத்து அவர்கள் தங்களது தேவைகளை அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகின்றனர். அல்லது ஒரு நோயை, தீமையை நிறைவேற்றுவதற்காக இஸும் அஸ்மாக்களையும், தாயத்தையும், மந்திரத்தையும், குறிபார்பவரையும் தேடி தங்களது காரியங்களை அவற்றில் முழுமையாக பொறுப்புச் சாட்டி நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். அல்லது இவற்றுடன் சேர்த்து அல்லாஹ்வையும் நம்பிக்கை வைப்பதன் மீலம் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார்கள். இதனாலேயே அல்லாஹ் இறைவிசுவாசிக்கு நிபந்தனையாக தவக்குல் வைப்பதை சுட்டிக் காட்டி அல்லாஹ்வின் மீது மாத்திரம் தவக்குல் வைத்தால் தான் உண்மையான இறைவிசுவாசி என்பதனை திட்டவட்டமாக தனது இறைவாக்கில் உறுதிப்படுத்துகின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

“நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” (5:23)
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி

இன்பமும் துன்பமும் நன்மையாய் அமைந்திட!

ரியாளுஸ் ஸாலிஹீன்

ஸுஹைப் பின் ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:

''ஓர் இறை நம்பிக்கையாளனின் விவகாரம் குறித்து நான் ஆச்சரியம் அடைகிறேன்.

அவனுடைய ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது.

இது ஒரு நம்பிக்கையாளனுக்கே அன்றி வேறெவருக்கும் வாய்க்கப் பெறவில்லை!

அவனுக்கு மகிழ்வு நிலை வந்தால் நன்றி செலுத்துகிறான்.

அது அவனுக்கு நன்மையாக அமைகிறது.

அவனுக்கு கஷ்ட நிலை வந்தால் பொறுமை காக்கிறான்.

அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது!’ (நூல்: முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைநம்பிக்கையாளரின் நிலைமை குறித்து வியப்பை வெளிப்படுத்தியது அவரைச் சிறப்பிக்கும் வகையில்தான்! அவரது இறைநம்பிக்கையையும் அதிலிருந்து மலரும் வாழ்க்கைப் போக்கையும் திருப்பங்களையும் மெச்சிப் பாராட்டியே நபியவர்கள் கூறினார்கள். அவனது ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது என்று!

தொடர்ந்து அதற்கு விளக்கமும் தந்தார்கள். மனித வாழ்வில் இறைவன் நிர்ணயித்த விதி என்பது – இன்பம் துன்பம் இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும். இவற்றை எதிர்கொள்ளும் விதத்தில் மனிதர்கள் இருவகையாய்ப் பிரிகின்றனர். நம்பிக்கையாளன் என்றும் நிராகரிப்பாளன் என்றும்!

ஏக இறைவன்மீது நம்பிக்கை கொண்டு வாழ்க்கையில் எது ஏற்பட்டாலும் அது இறைவன் நிர்ணயித்ததுதான் என்று நம்பி செயல்படுபவன் நம்பிக்கையாளன்.

வாழ்க்கையில் சிலபொழுது மகிழ்ச்சியும் இன்பமும் அவனை வந்தடைகின்றன. போதிய வசதி வாய்ப்புகள், கண்குளிர்ச்சியான மனைவி – மக்கள், கண்ணியம் காக்கும் உறவுகள் ஆகியவை கிடைக்கின்றன. இவை யாவும் உலக ரீதியான அருட்பேறுகள். இதேபோல் நற்கல்வியும் நல்லமல் செய்யும் நற்பேறும் கிட்டுகிறது. இவை மார்க்க ரீதியான அருட்கொடைகள்!

இத்தகைய மகிழ்வான நேரங்களில் இறை நம்பிக்கையாளன் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, அவனுக்கு நன்றி செலுத்துகிறான்.

சில நேரத்தில் வாழ்வில் கஷ்டமும் நஷ்டமும் ஏற்பட்டு துன்பங்கள் வந்து சூழ்ந்து கொள்கின்றன. அப்பொழுது அவற்றை அவன் பொறுமையோடு தாங்கிக் கொள்கிறான். அதற்கான கூலியையும் இன்பநிலையையும் இறைவனிடமிருந்து எதிர்பார்க்கிறான்.

இவ்வாறு பொறுமை, நன்றி எனும் இவ்விரு பண்புகளும் இறை நம்பிக்கையாளனின் வாழ்க்கையை அலங்கரிக்கும் இரு அணிகலன்களாகும். மனஇச்சைகளும் மாயைகளும் நிறைந்த இவ்வுலக வாழ்வில் இலட்சியத்தை நோக்கிய அவனது பயணம் தொடர இருதுருப்புகளாய் அவை பயன்பட்டு மறுமை வெற்றிக்கும் வழிவகுத்துக் கொடுக்கின்றன. எவ்வாறெனில் -

நன்றிக்கு பின்வரும் இறைவசனம் குறிப்பிடுவது போன்று இறையருட் கொடைகளை மேலும் மேலும் ஈர்த்து வரும் ஆற்றலுள்ளது:’ நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் உங்களுக்கு மேலும் மேலும் வழங்குவேன்’ (அல்குர்ஆன் 14 : 17)

பொறுமைக்குக் கிடைக்கும் நற்கூலிக்கோ அளவே இல்லை. குர்ஆன் ஓரிடத்தில் குறிப்பிடுவது போன்று: ‘பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்கின்றி – நிறைவாய் வழங்கப்படும்’ (அல்குர்ஆன் 39 : 10)

இறைநிராகரிப்பாளனின் நிலையோ இதற்கு நேர்மாறானது. வாழ்வில் அவனுக்கு மகிழ்ச்சி வந்தால் மமதை கொள்கிறான். நமக்கு என்றைக்கும் நற்பேறுதான். நம்மைபோல் உலகில் யாருண்டு என்று ஆணவம் பேசுகிறான். அளவுக்கதிகமாய் பூரித்துப் போகிறான்! இந்த இறுமாப்பு இறை நினைவை விட்டும் அவனைத் திசைதிருப்பும் சாபக்கேடாக அமைகிறது!

இதேபோல் துன்பம் வரும்பொழுது பொறுமை இழந்து பதறித் துடிக்கிறான். ஐயோ! அழிவு காலம் வந்துவிட்டதே என்று கூப்பாடு போடுகிறான் -இப்படிக் காலத்தையும் நேரத்தையும் ஏச அது, இறைவனை ஏசுவதாக ஆகிறது. ஏனெனில் இரவையும் பகலையும் சுழலச்செய்து காலத்தை உருவாக்குபவன் இறைவன்தானே!

இந்நபிமொழி இறைநம்பிக்கைக்கு ஆர்வமூட்டுவதுடன் உள்ளத்தில் விசுவாசம் உள்ளதென்பதற்கு பொறுமை ஓர் அடையாளம் என்றும் உணர்த்துகிறது!

நீங்கள் இறைநம்பிக்கையாளர் எனில், துன்பம் நேரும்பொழுது மனம் சஞ்சலம் அடையாமல் பொறுமையுடன் இருக்கவேண்டும். மாறாக உங்கள் மனம் பொறுமை இழந்து பதறிப் பரிதவித்தால் உங்கள் இறைநம்பிக்கை பலவீனம் அடைந்துள்ளது, பழுதுபட்டுள்ளது என்பதற்கு அது அடையாளமாகும். உடனே நீங்கள் பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுவதுடன் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு உங்கள் மனத்தைப் பக்குவப்படுத்திட வேண்டும். (அறிப்பாளர் அறிமுகம்- ஸுஹைப் பின் ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்)

ஸுஹைப் பின் ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரோம் நாட்டைச் சேர்ந்தவர். ஆரம்ப நாட்களிலேயே இஸ்லாத்தைத் தழுவிய நபித்தோழர்களில் குறிப்பிடத்தக்கவர். இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணியில் ஈடுபட்டதற்காக மக்காவில் எதிரிகளால் தொல்லைக்கும் தண்டனைக்கும் ஆளாக்கப்பட்டு பிறகு மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். அப்பொழுது வியாபாரத்தில் ஈட்டிய பெரும் செல்வத்தை மக்காவிலேயே விட்டு விடும்படியாக ஆயிற்று! அவர்களது தியாகத்தைச் சிறப்பிக்கும் வகையிலேயே இந்த இறைவசனம் இறக்கியருளப்பட்டது: (மக்களில் இப்படியும் ஒருவர் இருக்கிறார்: அவர் அல்லாஹ்வின் திருப்தியைத் தேடித் தன் வாழ்வையே அர்ப்பணித்து விடுகிறார்!) – இவர்கள் ஏராளமான நபிமொழிகளை மனனம் செய்திருந்தார்கள். பெரும் எண்ணிக்கையிலான தாபிஈன்கள் இவர்களிடம் இருந்து நபிமொழிகளை அறிவித்துள்ளனர். ஹிஜ்ரி 80 ஆம் ஆண்டு மதீனாவில் மரணம் அடைந்தார்கள்!

source: http://islamkural.com/home/?p=3712#more-3712

இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள்.


அன்புச் செல்வங்களுக்கு என்ற இந்தத்தொகுப்பு எளிய நடையில் இனிய முறையில் நம் சின்னஞ் சிறார்களுக்கு தமிழ் மொழியில் எடுத்துவைக்கப் பட்டுள்ளது. இந்த அவசரயுகத்தில் கல்விகள் பலவிதமாக இருந்தும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் புத்தகங்கள் பல இருந்தும் அதனைத் தொகுத்து வழங்கும் முயற்சி குறைந்து காணப்படுகின்றது.

எனவே அதை நிவர்த்தி செய்யும் வகையில் நம் குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டிய இஸ்லாமிய அடிப்படைத் தகவல்கள், இஸ்லாமிய பொது அறிவு, மற்றும் குண நலன்கள் என மூன்று தலைப்புகளாக இத்தொகுப்பு அமைக்கப் பட்டுள்ளது. இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயம். அந்த அன்புச் செல்வங்கள் ஈருலகிலும் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

1. இஸ்லாம் என்ற அரபிச் செல்லுக்கு பொருள் என்ன?

இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சாந்தி, சாமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் எனப்படும்.

2 . உன்னைப் படைத்த இறைவன் யார் ?

என்னைப் படைத்த இறைவன் அல்லாஹ்.

3 . உன் இறைவன் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலே உள்ள அர்ஷில் இருக்கிறான்.

4 அல்லாஹ்வின் அர்ஷை யார் சுமக்கிறார்கள்?

மலக்குகள்

5 . உனது நபியின் பெயர் என்ன?

எனது நபியின் பெயர் முஹம்மது (ஸல்) ஆவார்கள்.

6 . உனது மார்க்கத்தின் பெயர் என்ன?

எனது மார்க்கத்தின் பெயர் (தீனுல்) இஸ்லாம்.

7 . நீ எப்படி ஈமான் கொண்டாய்?

'வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையயும் தூதரும் ஆவார்கள்' என்று நான் ஈமான் கொண்டேன்.

8 . உனது ஆதி தந்தை தாய் பெயர் கூறு ?

எனது ஆதி தந்தைப் பெயர் ஆதம் (அலை) தாய் பெயர் ஹவ்வா (அலை) ஆகும்.

9 . நம் மார்க்கத்தின் தந்தை யார்?

நம் மார்க்கத்தின் தந்தை நபி இப்ராஹிம் (அலை) ஆகும்.

10 . உன் வேதத்தின் பெயர் என்ன?

என் வேதத்தின் பெயர் திருக்குர்ஆன்.

11. திருக் குர்ஆன் யாருக்கு யார் மூலம் அருளப்பட்டது?

திருக்குர்ஆன் இறைவனால் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. (மனிதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட உலகப் பொதுமறையே திருக்குர்ஆன்)

12 . குர் ஆன் எந்த மாதத்தில் அருளப்பட்டது?

ரமழான் மாதத்தில் அருளப்பட்டது.

13. நாம் எதற்காக ரமழானில் நோன்பு வைக்கின்றோம் ?

நாம் ரமழானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் நோன்பு வைக்கின்றோம்.

14 . இஸ்லாத்தின் கடமைகள் எத்தனை? அவை யாவை?

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து. அவை. 1. கலிமா 2. தொழுகை 3. நோன்பு 4. ஜகாத் 5. ஹஜ்

15. மறுமையின் முதல் கேள்வி எதைப்பற்றியது?

மறுமையின் முதல் கேள்வி தொழுகையை பற்றிதாய் இருக்கும்.

16. கடமையான தொழுகைகள் எத்தனை? அவை யாவை?

அல்லாஹ் நமக்கு ஐந்து வேளை தொழுகைகளை கடமையாக்கி உள்ளான் . அவை. 1.ஃபஜர், (காலை நேரத் தொழுகை) 2. ளுஹர்(மதிய தொழுகை) 3. அஸர்(மாலை நேரத் தொழுகை) 4.மஹ்ரிப் (சூரியன் மறையும் நேரத் தொழுகை) 5. இஷா (இரவுத் தொழுகை)

17. தொழாமல் இருந்தால் என்ன கிடைக்கும்?

தொழாமல் இருந்தால் அல்லாஹ் நம்மை ஸகர் என்னும் நரகத் தீயில் எறிந்து விடுவான். தீ நம் தோல்களை சுட்டுக்;;;;;;;;கரித்து விடும். அதனால் அல்லாஹ்வுக்கு பயந்து ஐவேளைதொழுது கொள்ள வேண்டும்.

18. நோன்பு என்றால் என்ன?

இறைவனுக்காக ரமழான் மாதத்தில் சுபுஹ் முதல் மஹ்ரிப் வரை உண்ணாமல், பருகாமல் எவ்வித தீய காரியங்களிலும் ஈடுபடாமல் இருப்பதற்கு நோன்பு எனப்படும்.

19 . ஜகாத் என்றால் என்ன?

ஜகாத் என்றால் செல்வந்தர்கள் தங்களது செல்வத்திலிருந்து 2.5 சதவிகிதம் தேவையுடையோருக்கு கொடுப்பதாகும். (பார்க்க : அல்குர்ஆன் 9:60)

20 . ஹஜ்; என்றால் என்ன?

செல்வமும், வசதியும், உடல் ஆரோக்கியமும் உள்ளவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்காநகர் சென்று இறைவன் விதித்த கடமைகளை செய்வதற்கு ஹஜ்; எனப்படும்.

21 . ஈமான் என்றால் என்ன?

அல்லாஹ்வை நம்புவது, அவன் படைத்த மலக்குகளை நம்புவது ரசூல்மார்களை நம்புவது, அவன் நமக்கு அளித்த வேதங்களையும் நம்பிக்கை கொள்வது மேலும் கியாமநாளை நம்புவது, நன்மை தீமையாவும் அல்லாஹ்வின் நாட்டம் என்று நம்பிக்கைக் கொள்வதற்கு ஈமான் எனப்படும்.

22 . முஸ்லிம் என்றால் யார்?

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்)அவர்கள் என்று ஏற்றுக் கொண்டு நடைமுறைபடுத்துபவருக்கு முஸ்லிம் என்று பெயர்.

23. மலக்குமார்கள் என்றால் யார்?

அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், அவனது கட்டளைகளை நிறை வேற்றுவதற்காகவும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இவர்களை அல்லாஹ் ஒளியினால் படைத்தான்.

24 . நபிமார்கள் என்பவர் யார்?

அல்லாஹ்விடமிருந்து வரும் செய்திகளையும், கட்டளைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும், மனிதர்களை நேர்வழி படுத்துவதற்காகவும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல மனிதர்களுக்கு நபிமார்கள், ரசூல்மார்கள் என்று பெயர்.

25. முதல் மனிதரும் முதல் நபியும் யார்?

ஆதம் நபி (அலை)

26. ஆதம் நபி எதனால் படைக்கப் பட்டார்கள் ? ஆதம் நபியின் மனைவி பெயர் என்ன?

ஆதம் நபியை மண்ணால் அல்லாஹ் படைத்தான். ஆதம் நபியின் மனைவி பெயர் ஹவ்வா (அலை).

27. திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதங்கள் எத்தனை? ஆவை யாவை?

திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்ட வேதங்கள் மொத்தம் நான்கு ஆகும். அவை 1.தவ்ராத், 2. ஜபூர், 3.இன்ஜீல், 4.புர்கான் (திருக்குர்ஆன்).

28. வேதங்கள் யார் யாருக்கு எந்தெந்த பாஷைகளில் அருளப்பட்டது?

தவ்ராத்து வேதம் நபி முஸா(அலை) அவர்களுக்கு அப்ரானி பாஷையிலும்

ஜபூர் வேதம் நபி தாவூது (அலை) அவர்களுக்கு யுனானி பாஷையிலும்

இன்ஜீல் வேதம் நபி ஈஸா (அலை) அவர்களுக்கு சுர்யானி பாஷையிலும்

புர்கான்(குர்ஆன்)வேதம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அரபிப் பாஷையிலும் வழங்கப்பட்டது.

29 . இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் எது?

இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம் திருக்குர்ஆன்.

30. குர்ஆனில் மொத்தம் எத்தனை பகுதிகளும், எத்தனை அத்தியாயங்களும் உள்ளன?

குர் ஆனில் மொத்தம் 30 பகுதிகளும் 114 அத்தியாயங்களும் உள்ளன.

31. குர் ஆனில் பெயர் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நபிமார்கள் எத்தனை?

குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்கள் மொத்தம் 25 ஆகும்.

32. அல்லாஹ்வைப் பற்றி கூறு?

அல்லாஹ் ஒருவன், அவன் பரிசுத்தமானவன். அவனுக்கு இணை துணை இல்லை. அவனுக்கு உணவு, உறக்கம், மறதி, மயக்கம் நிச்சயமாக கிடையாது. அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவு மில்லை. அவன் நித்திய ஜீவன். எந்த தேவையுமற்றவன் . அவனுக்கு நிகராக இவ்வுலகில் எதுவுமே இல்லை.

33. நபி (ஸல் ) அவர்களைப் பற்றி கூறுக?

நபி (ஸல்) அவர்கள் கி.பி. 570-ல் மக்காவில் பிறந்து தனது 63-ம் வயதில் மதினாவில் மரண மடைந்தார்கள். தம் இளம் வயதிலேயே ஒழுக்கம், நேர்மை, உண்மை, அமைதி, கண்ணியம் போன்ற நல்லகுணங்களைக் கொண்டிருந்தார்கள். இவர்களை அன்னாரின் 40-ம் வயதில் அல்லாஹ் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அன்னாரின் தாய் பெயர் ஆமினா, தந்தை பெயர் அப்துல்லாஹ்.

34. யாரிடம் நாம் பிராத்திக்க வேண்டும்?

எந்நேரமும், எந்த இடத்திலும் அல்லாஹ்வை நம்பி, அவனிடம் மட்டும்தான் பிரார்த்திக்க வேண்டும்.

35. அல்லாஹ்வை நீ எவ்வாறு அறிவாய்?

அல்லாஹ்வின் அத்தாட்சிகள் மற்றும் படைப்புகளான இரவு பகலைக் கொண்டும், சூரியன் சந்திரனைக் கொண்டும், வானம், பூமியைக் கொண்டும், அதற்கிடைப்பட்ட அவனது படைப்புகளைக் கொண்டும் நான் அல்லாஹ்வை அறிகிறேன்.

36. அல்லாஹ்வின் குணம் எத்தகையது?

அல்லாஹ் மிக்க கருணையாளன். அளவில்லாமல் அருள் புரிபவன். நிகர் இல்லாத அன்பு உடையவன். அந்த அன்பு எத்தகையது என்றால் ஒரு தாய் தன் பிள்ளையிடம் கொண்டிருக்கும் அன்பை விட 70 மடங்கு அதிகமானது. அவனுக்கு இணையாக எவரையாவது, எதையாவது வணங்கினால் மிகுந்த கோபமடைந்து நம்மை நிரந்தர நரகத்தில் எறிந்து விடுவான். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக)

37. அல்லாஹ் நம்மை கண்காணிப்பானா?

எப்பொழுதும், எந்த நொடியிலும், எங்கே இருந்தாலும் நம்மை கண்காணிப்பவன் அல்லாஹ். அதனால் எப்பொதும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும்.

38. அல்லாஹ்வின் நேசர்கள் யார்?

அல்லாஹ்வின் நேசர்கள் அல்லாஹ்வின் மீது பயபக்தி கொள்வார்கள் நேரான சத்திய வழியில் நடப்பார்கள். அவனுக்கு அதிகம் அஞ்சுவார்கள். எல்லா வகையான பாவங்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வார்கள். அனைத்து விதமான நல்ல அமல்களையும் செய்து வருவார்கள். திருமறைக் குர்ஆனையும், நபி (ஸல்)அவர்களின் சுன்னத் தான வழிமுறைகளையும் கடைப்பிடித்து வாழ்ந்து வருவார்கள்.

39. ஈமானின் நிலையில் மாறுபாடு ஏதேனும் ஏற்பட சாத்தியம் உண்டா?

நாம் பேசக்கூடிய சில வார்த்தைகளாலும், செய்யக் கூடிய சில செயல்களாலும், நம் ஈமானின் நிலை கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்.

40. ஈமானின் கூடுதல், குறைவு என் பதன் பொருள் என்ன?

அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து நடப்பதன் மூலமும் நல்ல செயல்களைச் செய்வதன் மூலமும் ஈமான் கூடுகிறது. பாவங்கள் மற்றும் தீய செயல்களால் ஈமான் குறைகிறது.

41 . இறுதி நாள் மீது நம்பிக்கைக் கொள்வது என்பதன் பொருள் என்ன?

இந்த உலகத்திற்கும், மற்ற அனைத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தவணையை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். மண்ணறைகளிலிருந்து இறந்தவர்களை அவன் எழுப்புவான். மேலும் ஒவ்வொருவரையும் அவர்கள் இந்த உலகில் செய்த செயல்களைப் பற்றி விசாரிப்பான். இறந்தவர்களை உயிர் கொடுத்து எழுப்பும் அந்த மறுமைநாளில் நற்கூலிகளையும், தண்டனைகளையும் பாரபட்சமின்றி மிகவும் நியாயமாக அல்லாஹ் வழங்குவான். மேலேகுறிப்பிட்ட அனைத்தையும் உறுதியாக நம்புவதுதான் இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்வது என்பதன் பொருளாகும்.

42 . முஹம்மது நபி (ஸல் ) அல்லாஹ்வின் திருத்தூதர் என்பதன் பொருள் என்ன?

இதன் பொருள் 'அவர்கள் எவற்றை கட்டளையிட்டார்களோ அவற்றை முழுமையாக ஏற்றுப் பின்பற்றுவதும், அவர்கள் எவற்றையெல்லாம் தடுத்தார்களோ அவற்றிலிருந்து முழுமையாக தவிர்ந்து கொள்வதும், அவர்கள் எதைப்பற்றியெல்லாம் அறிவித்தார்களோ அவற்றை அப்படியே நம்புவதும்' ஆகும்.

43. இறைவன் மன்னிக்காத மிகப் பெரும் பாவம் எது?

ஷிர்க் (இணைவைத்தல்) இறைவால் மன்னிக்கப்படாத மிகப் பெரும் பாவம் ஆகும்.

44. இணைவைக்கும் நிலையில் செய்யப்படும்நற்செயல்கள் அல்லாஹ்வினால் ஏற்கப்படுமா?

இணைவைக்கும் நிலையில் செய்யப்படும் எந்த நற்செயல்களும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. அதைக் கீழ்காணும் திருமறையின் இரண்டு வசனங்கள் மூலம் அறியலாம்.

'அவர்கள் இணைவைத்தல் அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டு அழித்து விடும்' (காண்க அல்குர்ஆன் 6.88)

'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத வேறு பாவங்களை, தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்' (காண்க அல்குர்ஆன் 4.116)

45. அனைத்து முஸ்லீம்களும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள் யாவை?

1. இவ்வுலகைப் படைத்து பாதுகாத்து, பரிபாலித்து வருபவனும், இந்த உலகின் எல்லா விதமான, நிகழ்வுகளுக்கும் காரணமானவனுமான தம் இரட்சகனைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

2. தம் மார்க்கத்தைப் பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ளுதல்.

3. முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

46. நமக்குத் தெரியாத மறைவான ஐந்து விஷயங்கள் யாவை?

1. இறுதி நாளின் வருகை (நேரம்) பற்றியது

2. மழை பொழியும் நேரம் பற்றியது

3. தாய் தன் கர்ப்பத்தில் சுமப்பவைகளைக் குறித்து

4. தினம் நாம் செய்வது (சம்பாதிப்பது) குறித்து

5. நாம் இறக்கப் போகும் பூமி பற்றியது

(மேலும் காண்க அல் குர்ஆன் 31:34)

47. நம்மை தவறு செய்ய தூண்டுவது யார்?

நம்மை தவறு செய்யத் தூண்டுவது ஷைத்தான். ஷைத்தானைப் பின்பற்றினால் நரகம் நிச்சயம்.

48. நரகம் என்றால் என்ன?

மிகமோசமான இருப்பிடம் இன்னும் எரியும் நெருப்பு.

49. தீமை செய்தால் என்ன கிடைக்கும் ?

இறைவனிடமிருந்து தண்டனை.

50. நன்மை செய்தால் என்ன கிடைக்கும்?

இறைவனிடமிருந்து சுவர்க்கம் கிடைக்கும்.

51. சுவர்க்கம் என்றால் என்ன?

மிகவும் நல்ல இடம். நாம் சுகமாக ஓய்வெடுக்கலாம். விரும்பியவைகள் அங்கே கிடைக்கும்.

52. உலகம் எப்பவும் இப்படியே இருக்குமா?

இல்லை. ஒரு நாள் உலகம் எல்லாமே அழிந்துவிடும். அதனால் அல்லாஹ்வுக்கு பயந்து நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்.

53. ஹலால் என்றால் என்ன?

அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல் ) அவர்களும் மார்க்கத்தின்பால் அனுமதித்த அனைத்துக் காரியங்களும் ஹலால் ஆகும்.

54. ஹராம் என்றால் என்ன?

அல்லாஹ்வும், அவனது தூதர் நபி (ஸல் ) அவர்களும் மார்க்கத்தின்பால் தடை செய்த விஷயங்கள் அனைத்தும் ஹராம் ஆகும்.

55. கொலையைவிட கொடிய செயல் எது?

பித்னா (குழப்பம் - கலகம் உண்டாக்குதல்) (காண்க அல்குர்ஆன் 2:191ஃ 2:217)

56. பிறரிடம் நாம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?

நாம் பிறரிடம் மிகவும் அன்பாகவும், பிறருக்கு உதவி செய்யும் முகமாக இரக்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். சுடு சொல் பேசக்கூடாது. தவறான செயலும் செய்யக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் 'எவர் ஒருவர் தன் சொல்லாலும் செயலாலும் பிறர் மனதை புண்படுத்தாமல் இருக்கிறாரோ அவர் தான் உண்மையான முஸ்லீமாவார்'.

57. நாம் யாரை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்?

நல்ல குணம் உடையவர்களையும், இறைவனுக்கு அஞ்சி அடிபணிந்து நடப்பவர்களையும் நாம் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்காக நட்பு கொள்வதும், அல்லாஹ்வுக்காக சினமுறுவதும் (நம்பிக்கையாளனின்) மேலான செயலாகும். (அறிவிப்பவர்: அபுதா (ரலி) நூல்:அபுதாவூத்)

58. மாற்று மதத்தவரின் உரிமைக்கு எந்த அளவு இஸ்லாத்தில் மதிப்பு தரப்பட்டிருக்கிறது என்பதற்கு ஹதீஸ் சான்று கூறு?

எவன் ஒருவன் முஸ்லிமல்லாத ஒருவனை அநியாயமாக கொலை செய்துவிடுகிறானோ அவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகரமுடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவுள்ளார்கள்.

(நூல்கள் புகாரி, அபு தாவூத்)

மண்ணில் உள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான் என்பது நபி மொழி. (நூல்:திர்மிதி)

இஸ்லாமியப் பொதுஅறிவு.

இஸ்லாமியப் பொதுஅறிவு

1. ஹிஜ்ரத் என்றால் என்ன?

வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.

2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்?

ஹபஸா (அபிசீனியா)

3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?

முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து.

4 . ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன?

1. முதல் மாதம் முஹர்ரம்,

2. இரண்டாம் மாதம் ஸபர்,

3. முன்றாம் மாதம் ரபிவுல் அவ்வல்,

4, நான்காம் மாதம் ரபிவுல் ஆகிர்,

5, ஐந்தாம் மாதம் ஜமாஅத்துல் அவ்வல்,

6. ஆறாம் மாதம் ஜமாஅத்துல் ஆகிர்,

7. ஏழாம் மாதம் ரஜப்,

8. எட்டாம் மாதம் ஷாஃபான்,

9. ஒன்பதாம் மாதம் ரமழான்,

10. பத்தாம் மாதம் ஷவ்வால்,

11. பதினோன்றாம் மாதம் துல் கஅதா,

12. பனிரெண்டாம் மாதம் துல் ஹஜ்.

5. முஸ்லிம்களின் 3 புனித நகரங்கள் எவை?

1. புனித கஃபா ஆலயம் உள்ள மக்கா.

2. மஸ்ஜித் நபவீ இருக்கும் மதீனா.

3. மஸ்ஜித் அக்ஸா இருக்கும் பாலஸ்தீனம்.

6. உம்முல் குர்ஆன் எது?

ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)

7. ரூஹூல் அமீன் என்பது யாருடைய பெயர்?

வானவர் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்களுடைய பெயர்

8. நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?

23 ஆண்டுகள்

9. குர்ஆன் மக்காவில் எத்தனை ஆண்டுகள், மதீனாவில் ஆண்டுகள் இறங்கியது?

மக்காவில் : 13 ஆண்டுகள் , மதீனாவில் : 10 ஆண்டுகள்

10 . குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு எத்தனை நன்மைகள் உண்டு?

குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு. (ரமழானில் 70-நன்மைகள்-).

11. திருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?

அப்துல்ஹமீது பாகவி

12. ஸஜ்தா இல்லாத தொழுகை யாது?

ஜனாஸா தொழுகை

13. ஆரம்பத்தில் திருக்குர் ஆனை எதில் பதிவு செய்தனர் ?

எலும்பு, தோல், மரப்பட்டைகள். மேலும் நபிகளாரும், ஸஹாபாப் பெருமக்களும் மனனம் செய்து கொண்டனர்.

14 . திருக்குர்ஆனின் முதல் வசனம் எது ?

'இக்ரஹ் பிஸ்மிரப்பிக்கல்லதி ஹலக்' (அல் குர்ஆன் 96 : 1)

15. நபி (ஸல் ) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய இறை வசனம் எது?

'அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து' என துவங்கும் வசனமாகும்(5:3)

16. உலகின் இறுதி நபி யார் ?

உலகின் இறுதிநபி முஹம்மத்(ஸல்) அவர்கள்

17. மைக்கேல் ஹார்ட் எழுதிய The 100 என்ற ஆய்வு நூலில், எல்லாருக்கும் முதன்மையாக, தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

18. குர் ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபி யார் ?

நபி முஸா (அலை)

19. இறுதி நாளின் அடையாளமாக, வானிலிருந்து இறங்கிவரக்கூடிய நபி யார் ?

நபி ஈஸா (அலை)

20. திருக் குர் ஆனில் பெயர் கூறப் பட்ட ஒரே பெண்மணி யார் ?

நபி ஈஸா(அலை) அவர்களின் தாய் மரியம் (அலை).

21. திருக் குர் ஆனில் ஒரு இடத்தில் மட்டும் வரும் நபித் தோழரின் பெயர் என்ன ?

ஜைது (ரலி) ( அல் குர்ஆன் 33 : 37)

22. ஹதீஸ் கிரந்தங்கள் சிலவற்றின் பெயர் கூறு?

புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி, முஸ்னத் அஹ்மத், நஸயீ

23. எந்த கலீஃபாவின் ஆட்சியில், ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?

கலிபா உஸ்மான் (ரலி)

24. பிலால்(ரலி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்துமீட்டவர் யார் ?

அபு பக்கர் (ரலி) அவர்கள்

25. முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ?

அலி (ரலி) அவர்கள்.

26. இஸ்லாமிய வரலாற்றில் முதல் பெண் உயிர் தியாகியின் பெயர் என்ன ?

அன்னை சுமையா (ரலி) அவர்கள்.

27. இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தொழர் யார் ?

காலித் பின் வலீத்(ரலி)

28. தாங்கள் வழி நடத்திச் சென்ற அனைத்து போர்களிலும், வெற்றி ஈட்டிய நபித் தொழர் யார் ?

காலித் பின் வலீத் (ரலி)

29. வியாபாரிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேள்விப் பட்டு இஸ்லாத்தை ஏற்ற கேரள மன்னர் யார் ?

மன்னர் சேரமான் பெருமாள்-அப்துர் ரஹ்மான்

30. நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ?

லவ்ஹூல் மஹ்ஃபுள்

31. மனிதனின் வலப்புறமும், இடப்புறமும் இருந்து நன்மை, தீமைகளை எடுத் தெழுதும் வானவர்கள் பெயர் என்ன ?

கிராமன் - காத்திபீன்

32. ஒரு நற்செயலை செய்தால் எத்தனை மடங்கு நன்மைஉண்டு ?

10 மடங்கு நன்மை உண்டு.

33. மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன ?

உலகின் ஆயிரம் ஆண்டுகள் (காண்க அல்குர்ஆன் 22 : 47)

34. அல்லாஹ் - அளவற்ற அருளாளன்

35. திருக்குர்ஆன் - இறைவேதம்

36. குர்ஆனின் முதல் வசனம் இறங்கிய இடம்?

ஹிரா குகை

37 அல்லாஹ்வுவை வணங்குவதற்காகமுதலில் ஆதம் (அலை)அவர்களால் கட்டப்பட்டு பிறகு இப்ராஹீம் (அலை)அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாயில் யாது ?

மக்காவிலுள்ள கஃபா

38. கலிபா என்பவர் யார்?

இஸ்லாமிய ஆட்சியாளர்

39. ஸஹாபாக்கள் எனப்படுவோர் யாவர்?

நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்

40. ஈத் அல் பித்ர் என்றால் என்ன?

புனித ரமழான் மதத்தின் இறுதியில் வரும் பெருநாள்

41. ஈத் அல் அத்ஹா என்றால் என்ன?

தியாகத்திருநாள் - ஹஜ்ஜூப் பெருநாள்

42. சுன்னா என்றால் என்ன?

நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறை சொல், செயல், அங்கிகாரங்களுக்கு சுன்னா எனப்படும்.

43. ஸலாத் என்றால் என்ன?

தொழுகை

44. ஸஜ்தா என்றால் என்ன?

தொழும் போது தலையை குனிந்து நெற்றியை பதிக்கும் முறை

45. சூரா என்றால் என்ன?

குர்ஆனின் பாகம்

46. ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்

47. ஸவ்ம் என்றால் என்ன?

நோன்பு

48. வித்ர் என்றால் என்ன?

இரவில் தூங்குவதற்கு முன் இறுதியாகத் தொழும் தொழுகை

49. வுளு என்றால் என்ன?

தொழுகைக்கு முன் நீரால் முகாம் கை கால் போன்ற உடல் உறுப்புகளை சுத்தம் செய்வது

50. தக்வா என்றால் என்ன?

இறையச்சம்

51. தவ்பா என்றால் என்ன?

பாவ மன்னிப்பு

52. புர்கான் என்றால் என்ன?

திருக்குர்ஆனின் மற்றுமொரு பெயர் - பிரித்தரிவித்தல் என்று பொருள்.

53. தீன் என்றால் என்ன?

அல்லாஹ்வின் மார்க்கம்

54. தூஆ என்றால் என்ன?

இறைவனிடம் உதவி கேட்டு பிராத்தனை புரிவது

55. பாங்கு என்றால் என்ன?

தொழுகைக்கான அழைப்பு