அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, November 26, 2012

கவிதைகள்,




தாயும் சேயும் கருவறையில்...  
அகத்தே நீ உதைக்க
புறத்தே காணாத பேரின்பம்
உன்னை சுமக்கும் ஒவ்வொரு துளியும்
எனை வென்று சிறை மீட்பேன்
என் கண்மணியே உன்னை
 
இவை தான் உலகமென்று
புறம் காண மறுக்குதம்மா உள்ளம்
அகத்தே உன் அரவணைப்பில்
நாற்பது வாரமாய் தவமிருந்து
எம் உள்ளம் படைத்தவளே
  
எனை சிறைமீட்கும் வேள்விதனில்
வேதனை பல அனுபவிப்பாயே
என் தாயே உன் வேதனையின்
தாக்கத்திலே அலறுகின்றேன்
அழுகுரலாய் என் ஆதங்கம்
 
சோதனையும் வேதனையும்
உன் முகம் காண காற்றாக
பறந்திடுமே கண்மணியே
நீ ஆணாக பிறப்பாயோ
பெண்ணாக பிறப்பாயோ - ஏக்கம்
எங்கும் நிறைந்திருக்க
தூக்கமில்லா உன் நினைப்பில்
காத்திருப்பேன் உனக்காக
 
பெண்மையிலே வளர்ந்தேனே
உன்னுள்ளம் கொண்டேனே
பெண்ணாக முதல் பிறப்பு
ஆணாகும் அதன் பிறகு
வித்திட்ட விதியம்மா
மாற்றமிலா உண்மையிது
 
எனைக்காக்கும் இன்னுயிரே
உனைக்காப்பேன் என்றுமிங்கு
உன் சேயான நானிங்கு
தாயே உன் பாதம் முத்தமிடுகிறேன்
தர்மம் புகட்டிவிடு தாயே
எமக்கு..............



கவிதைகள்



      ன்பு     
 
மெல்லிய உணர்வுக் கயிறு மனதில்
அல்லியாய்ப் பூத்து ஆனந்திக்கும்.
 
அன்பினால் புன்னகை உதட்டில் வரும்
கண்களில் கண்ணீர் வரும்.
 
உண்மை அன்பு எத்தனை திண்மைத்
துன்பங்களையும் தாங்கும் வலிமையுடைத்து.

உண்மை அன்பு ஒருவனுக்கு யானை
பலம் தரும் சக்தியுடைத்து.
 
அன்பினால், அரசு, வீரம், காதல்
கொடை அனைத்தும் உருவாகும்.
 
மழலை, மாதா, மாணவர், மாஉலகிற்கும்
மகோன்னத ஜீவசக்தி அன்பு.
 
எத்தனை பொருள் பணம் இருந்தென்ன
அன்பிலார் எதுவும் அற்றவர்.
 
கரடுமுரடான கற்களில் நடக்கும் உணர்வே
அன்பிலாரோடு செல்லும் பயணமும்(வாழ்வும்).
 
அன்பிற்காக உயிரையும் கொடுக்கும் மகா
சக்தியுடையது உண்மை அன்பு.
 
அன்பு அகிலத்து நோய்களைத் தீர்க்கும்
இன்ப அதிசய ஊற்று.