கனிவாக நடந்துக் கொள்வோம்!
மௌலவி M.T.M.ஹிஷாம் மதனீ
ஒரு முறை "ஸூப்யானுஸ் ஸவ்ரி" ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது தோழர்களை நோக்கி: "கனிவு என்றால் என்ன?" என்று வினவினார்கள். அதற்கு தோழர்கள்: "அபூ முஹம்மதே நீங்கள் கூறுங்கள் எனக் கூறினார்கள்." அப்போது இமாமவர்கள்: "அந்தந்த விடயங்களை அதனதன் இடத்தில் மேற்கொள்வதாகும்" என பதிலளித்துவிட்டு, அதனை பின்வருமாறு விளக்கினார்கள்.
"கடினமாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் கடினமாக நடந்து கொள்வதும், மென்மையாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் மென்மையாக நடந்து கொள்வதும், வாளேந்திப் போராட வேண்டிய இடத்தில் வாளேந்திப் போராடுவதும், சாட்டையைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் சாட்டையைப் பயன்படுத்துவதுமே கனிவாகும்" என விளக்கினார்கள்.

