அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Tuesday, December 14, 2021

அல்லாஹ்வின் திருப் பெயர்கள்

 

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்
1) அல்லாஹ் - அல்லாஹ்
2) அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்
3) அர்ரஹீம் - நிகரற்ற அன்புடையவன்
4) அல் மலிக் - பேரரசன்
5) அல்குத்தூஸ் - பரிசுத்தமானவன்
6) அஸ்ஸலாம் - சாந்தி மயமானவன்
7) அல்முஃமின் - அபயமளிக்கிறவன்
8) அல்முஹைமின் - பாதுகாப்பளிக்கிறவன்
9) அல் அஜீஜ் - யாவற்றையும் மிகைத்தவன்
10) அல் ஜப்பார் - அதிகாரத்தன்மையுள்ளவன்
11) அல் முதகப்பீர் - பெருமைக்குரியவன்
12) அல் காலிக் - படைக்கிறவன்
13) அல் பாரிஉ - புதிதாக உண்டாக்குகிறவன்
14) அல் முஸவ்விர் - உருவம் அமைக்கிறவன்
15) அல் ஙஃப்பார் - அதிகம் மன்னிக்கிறவன்
16) அல் கஹ்ஹார் - அடக்கியாள்கிறவன்
17) அல் வஹ்ஹாப் - பெருங்கொடையாளன்
18) அர் ரஜ்ஜாக் - உணவளிக்கிறவன்
19) அல்ஃபத்தாஹ் - வெற்றியளிக்கிறவன்
20) அல் ஙலீம் - மிக்க அறிந்தவன்
21) அல் காபிள் - இறுக்கிப் பிடிக்கிறவன்
22) அல் பாஸித் - விரிவாக வழங்குகிறவன்
23) அல்ஃகாபிள் - தாழ்த்துகிறவன்
24) அர்ராஃபிஃ - உயர்த்துகிறவன்
25) அல்முஇஜ்ஜூ - கண்ணியமளிக்கிறவன்
26) அல்முதில்லு - கேவலப்படுத்துகிறவன்
27) அஸ்ஸமீஉ - செவியேற்கிறவன்
28) அல் பசீர் - பார்க்கிறவன்
29) அல் ஹகம் - தீர்ப்பளிக்கிறவன்
30) அல் அத்லு - நீதியாளன்
31) அல்லதீஃபு - உள்ளன்புள்ளவன்
32) அல் கபீர் - செய்தி அறிகிறவன்
33) அல் ஹகீம் - சாந்தமுள்ளவன்
34) அல் அளீம் - மகத்துவமிக்கவன்
35) அல்ஙஃபூர் - மிக மன்னிக்கிறவன்
36) அஷ்ஷகூர் - நன்றி பாராட்டுகிறவன்
37) அல் அலிய்யு - உயர்வானவன்
38) அல் கபீர் - மிகப் பெரியவன்
39) அல் ஹஃபீள் - பாதுகாக்கிறவன்
40) அல் முகீத் - உணவை உற்பத்தி செய்கிறவன்
41) அல் ஹஸீப் - போதுமானவன்
42) அல் ஜலீல் - மாண்புமிக்கவன்
43) அல் கரீம் - சங்கைக்குரியவன்
44) அர்ரகீப் - கண்காணிக்கிறவன்
45) அல் முஜீப் - முறையீட்டை ஏற்பவன்
46) அல்வாஸிஃ - விசாலமானவன்
47) அல் ஹகீம் - ஞானமுள்ளவன்
48) அல் வதூத் - உள்ளன்புமிக்கவன்
49) அல் மஜீத் - மேன்மைக்குரியவன்
50) அல் பாஇஸ் - இறந்தவர்களை எழுப்புகிறவன்
51) அஷ்ஷஹீத் - சாட்சியாளன்
52) அல்ஹக் - உண்மையாளன்
53) அல் வகீல் - பொறுப்பேற்கிறவன்
54) அல்கவிய்யு - வல்லமைமிக்கவன்
55) அல் மதீன் - உறுதி வாய்ந்தவன்
56) அல் வலிய்யு - உதவியாளன்
57) அல் ஹமீத் - புகழுக்குரியவன்
58) அல் முஹ்ஸீ - சூழ்ந்து அறிகிறவன்
59) அல் முப்திஉ - ஆரம்பமாக உண்டாக்குகிறவன்
60) அல் முயீத் - மீளவைக்கிறவன்
61) அல் முஹ்யீ - உயிர்ப்பிக்கிறவன்
62) அல் முமீத் - மரணிக்கச் செய்கிறவன்-
63) அல் ஹய்யு - நித்திய ஜீவனானவன்
64) அல் கய்யும் - என்றும் நிலைத்திருப்பவன்
65) அல் வாஜித் - நினைத்ததை பெறுபவன்
66) அல் மாஜித் - மேன்மையானவன்
67) அல் வாஹித் - தனித்தவன்
68) அல் அஹத் - ஏகன்
69) அஸ்ஸமத் - தேவையற்றவன்
70) அல் காதிர் - ஆற்றலுள்ளவன்
71) அல் முக்ததிர் - மாபெரும் சக்தி உடையவன்
72) அல் முகத்திம் - முற்படுத்தி வைக்கிறவன்
73) அல் முஅக்கிர் - பிற்படுத்தி வைக்கிறவன்
74) அல் அவ்வல் - முதலானவன்
75) அல் ஆகிர் - இறுதியானவன்
76) அல்ளாஹிர் - பகிரங்கமானவன்
77) அல் பாதின் - அந்தரங்கமானவன்
78) அல் வாலீ - அதிகாரமுள்ளவன்
79) அல் முதாஆலீ - மிக்க உயர்ந்தவன்
80) அல் பர்ரு - உபகாரம் செய்கிறவன்
81) அல் தவ்வாப் - தவபாவை ஏற்கிறவன்
82) அல் முன்தகிமு - பழி வாங்குகிறவன்
83) அல் அஃபுவ்வு - மன்னிக்கிறவன்-
84) அர்ரவூஃப் - இரக்க சிந்தையுள்ளவன்
85) மாலிகுல் முல்க் - அரசாட்சிக்குரியவன்
86) துல்ஜலாலி வல்இக்ராம் - மாண்பும் மரியாதையும் உடையவன்
87) அல் முக்ஸித் - நீதியாளன்
88) அல் ஜாமிஃ - ஒன்று சேர்க்கிறவன்-
89) அல் ஙனிய்யு - தேவையற்றவன்
90) அல் முங்னீ - தேவையறச் செய்கிறவன்
91) அல் மானிஃ - தடுக்கிறவன்
92) அள்ளார்ரு - துன்பமுறச் செய்கிறவன்
93) அந்நாபிஃ - பலன் தருகிறவன்
94) அந்நூர் - ஒளிமயமானவன்
95) அல் ஹாதீ - நேர்வழி காட்டுகிறவன்
96) அல் பதீஃ - புதுமையாய்ப் படைக்கிறவன்
97) அல் பாகீ - நிலையானவன்
98) அல் வாரித் - அனந்தர உரிமை கொள்பவன்
99) அர் ரஷீத் - நேர்வழி காட்டுபவன்
100) அஸ்ஸபூர் - மிக்கப் பொறுமையாளன்

Monday, March 14, 2016

யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்!


யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்பது விஷயங்கள்!
சில தினங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு, எங்களுக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் அவரது கணவனோடு வந்திருந்தார்.
அவரின் வயது பற்றி எங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டுதான் இருந்தது. மனிசு சொன்னது தன்னொத்த வயது இருக்கும் என்று! அதாவது 35. மகள் சொன்னாள் அவருக்கு 34 மட்டில் தான் இருக்கும் என்று. நான் சொன்னேன் அவர் வந்தவுடன் அவவிடமே கேட்டுப் பார்ப்போம்.
புருஷனோடு அந்த சர்ச்சைக்குரிய பெண்மணி எங்கள் வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வந்ததும் நாங்கள் மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சிரித்துக் கொண்டோம். வந்திருந்த பெண்மணி ஊர் துளவாரங்களில் அவ்வளவு விருப்பம் இல்லாத பெண்மணி. எங்களின் சிரிப்பை என்ன என்றும் கேட்கவில்லை.
கடைசியில் புருஷனும் பெண்சாதியும் நாங்களும் ஒரு பிளேன் டீ குடித்ததன் பின்பு மகள் தான் கேட்டாள் "அண்ணி உங்களுக்கு என்ன வயது?" என்று! எங்களுக்குள் சர்ச்சை என்றும் சொன்னாள். எங்களில் யாரும் 35 வயதுக்கு மேல் மதிக்கவில்லை என்பதையும் சொன்னோம்.
அதற்கவர் "நான் யாருக்கும் வயது சொல்வதில்லை நீ கேட்டபடியால் மட்டும் சொல்கிறேன் எனக்கு 41" என்றார்.
மகளும் மனிசியும் ஆச்சரியத்தை முகம், கண், வாய் எல்லாவற்றாலும் வெளிப்படுத்தினார்கள். அவ்வளவு இளமை அந்த பெண்மணியிடம்!
இந்தப் பெண்கள் ஏன் வயதை சொல்வதில் பின்னடிக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆனால் விடை இல்லை.

Mashallah Beautiful Islamic Song (Arabic)


Friday, November 13, 2015

அல்லாஹ்வின் அருள்மொழி

நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல்!
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்.(ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள். தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர். எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன்: 3:110)
அல்லாஹ்வை மறக்க வைத்த உலகின் வீணான ஆசைகள்!
தாங்களும் முஸ்லீம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள். (இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக! அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன. (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 15:42-3)
இத்தகைய கொடுமைக்காரர்கள் அல்லாஹ்விடம் அச்சம் கொள்ளமாட்டார்களா?
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்: 2:114)
அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்தை உறுதியாக்கி, வீண்பெருமையை தவிர்த்தல்!
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான். இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும். அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும். நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள். (அல்குர்ஆன்: 2:272)
விசாலமான இறையருள்!
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன். யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன்: 2:261)
அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். அவனே மரிக்கச் செய்கிறான்!
முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள். பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி(அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்; "அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்" என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான். மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். அவனே மரிக்கச் செய்கிறான். இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 3:156)
இறைவன் நாடியவருக்கே நேர்வழி
(நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உங்களால் முடியாது. எனினும், தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்!'' (அல்குர்ஆன் 28:56)

Tuesday, April 28, 2015

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும்

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு பாகத்தை (மனிதன், ஜின், பறவைகள், மிருகங்கள், ஊர்வன என) அனைத்துப் படைப்பினங்களுக்கிடையே அல்லாஹ் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன்மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டி மீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா 4291)

உம்ராச் செய்யும் முறை

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எமது இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!.

இஸ்லாமிய சகோதரனே! புனித மக்காவிற்குச் சென்று உம்ராச் செய்வதில் அதிக நன்மை உண்டு. அந்நன்மைகளை அடைந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நாம் மக்காவிற்குச் சென்று உம்ராச் செய்கின்றோம். நாம் செய்கின்ற உம்ரா நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய முறைப்படி இருக்க வேண்டும். அப்போதுதான் அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே உம்ராவிற்கு செல்பவர்கள் இப்பிரசுரத்தை படிப்பதன் மூலம் உரிய முறையில் தங்களது உம்ராக்களை நிறைவேற்றலாம் என எண்ணுகின்றேன்.

உம்ராச் செய்யும் முறைகள்:
உம்ராச் செய்ய நாடுபவன் “மீகாத்” எல்லையை வந்தடைந்ததும் குளித்து, தன்னை சுத்தம் செய்து கொள்வது ஸுன்னத்தாகும். பெண்களும் ஆண்களை போன்று இவ்வாறு குளித்து, தங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய், பிள்ளைப்பேறு இரத்தப்போக்கு ஏற்பட்ட பெண்கள் கூட குளிப்பது ஸுன்னத்தாகும். பின்னர் சிறந்த நறுமணங்களைப் பூசிக் கொள்ள வேண்டும். இது ஸுன்னத்தாகும். இஹ்ராம் அணிந்ததன் பின்னர் அதன் சுகந்தம் இருந்தால் அதில் குற்றமில்லை.

உம்ராச் செய்ய செல்லும் ஆண்கள் தைத்த ஆடைகள் அணியக்கூடாது. தைத்த ஆடைகள் அனைத்தையும் கழற்றி விட்டுப் தைக்காத, சுத்தமான இரண்டு வெள்ளை ஆடைகளை மாத்திரம் அணிந்து கொள்ள வேண்டும். இது தான் ஸுன்னத்தாகும்.

இதற்கு ‘இஹ்ராம் ஆடை’ எனச் சொல்லப்படும். பெண்கள் வழமையில் தாங்கள் அணிகின்ற, விரும்பிய எந்த ஆடையானாலும் அதை அவர்கள் அணியலாம்.

பின்னர் மீகாத் எல்லையில் உம்ராவிற்காக நிய்யத் செய்யுமுன் அவ்விடத்தில் பள்ளிவாசல் இருந்து, கடமையான தொழுகை நேரமாக அது இருந்தால் அத்தொழுகையை நிறைவேற்ற வேண்டும். தொழுகை நேரமில்லையென்றால் பள்ளிக் காணிக்கையான “தஹிய்யதுல் மஸ்ஜித்” இரண்டு ரகாஅத் தொழுது கொள்ள வேண்டும்.

பின்னர், உம்ராச் செய்யச் செல்பவன் மீகாத் எல்லையிலிருந்து “லப்பைக்க உம்ரத்தன் ” என்று உம்ராவிற்காக நிய்யத் செய்ய வேண்டும். மனதால் நிய்யத் செய்வதோடு நாவால் மொழிவதும் ஸுன்னத்தாகும்.

பின்னர் ஆண் பெண் அனைவரும் “தல்பியா” சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து, அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் இதை சப்தமிட்டும், பெண்கள் மற்றவர்களுக்குக் கேட்காமல் தங்களுக்குள்ளே கேட்குமளவிற்கு மெதுவாகவும் தல்பியா சொல்ல வேண்டும்.
மேலும் மக்காவை வந்தடையும் வரை அதிகமாக திக்ர் செய்வதும், அதிகமாக பிரார்த்தனை செய்வதும் ஸுன்னத்தாகும்.

தல்பியா சொல்லும் முறை:
“லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லாஷரீக லக்”
(பொருள்: “நான் வந்து விட்டேன். யா அல்லாஹ் நான் வந்து விட்டேன். நான் வந்து விட்டேன். உனக்கு இணையாக எவரும் இல்லை. நான் வந்து விட்டேன். நிச்சயமாக அனைத்துப் புகழும், ஆட்சியும், அதிகாரமும் உனக்கு மட்டுமே உரித்தது. (மீண்டும் கூறுகிறேன்) உனக்கு இணை எவரும் இல்லை”).

பின்னர் உம்ராச் செய்ய வருபவன் மக்காவில் மஸ்ஜிதுல் ஹராமை வந்தடைந்ததும் தனது வலது காலை வைத்து பிரவேசிக்கும் போது கீழ் வரும் துஆவை (பிராத்தனையை) ஓத வேண்டும். அதாவது:

“பிஸ்மில்லாஹ் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸுலில்லாஹ் அல்லாஹும்மஃக்பிர்லீ துனூபீ வஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக. அஊது பில்லாஹில் அளீம், வபிவஜ்ஹிஹில் கரீம், வபிசுல்தானிஹில் கதீம் மினஷ் ஷைதானிர் ரஜீம்”

(பொருள்: “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர் மீது உண்டாவதாக. யா அல்லாஹ் என் பாவங்களை மன்னித்து உன் கருணையின் கதவுகளை எனக்குத் திறந்து விடுவாயாக. சாபத்திற்கு ஆளான ஷைதானின் தீங்கிலிருந்து தப்பித்துக் கொள்ள சர்வ சக்தியும், உயர்ந்த பார்வையும், முழுமையான அதிகாரமும் படைத்த அல்லாஹ்வின் உதவியை நாடி நிற்கின்றேன்”)

பின்னர் அவன் தல்பியாக் கூறுவதை விட்டு விட்டு நேராக ஹஜருல் அஸ்வத் எனும் கல்லை முத்தமிட செல்ல வேண்டும். அக்கல்லை முத்தமிட முடியாமல் போனால் அதன் பக்கம் திரும்பி கையைக் காட்டுவது போதுமானது. அச்சமயம் அங்கிருப்போருக்கு தொல்லை தரும் விதத்தில் நடந்து கொள்வது கூடாது. மற்றவர்களைத் தள்ளிக் கொண்டு பலாத்காரமாக எதையும் செய்வதற்கு முற்படக் கூடாது. அனைத்தையும் மிக அமைதியாகச் செய்ய வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொடும் போது கீழ் வரும் துஆவை ஓத வேண்டும். அதாவது:

“பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்.அல்லாஹும்ம ஈமானன் பிக, வதஸ்தீகன் பிகிதாபிக, வவஃபாஅன் பிஅஹ்திக, வ இத்திபாஅன் லிஸுன்னதி நபிய்யிக முஹம்மதின் ஸல்லல்லாஸு அலைஹி வஸல்லம்”
(பொருள்: “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்; அல்லாஹ் மிகப் பெரியவன்; யா அல்லாஹ் உன்னை நம்பிக்கை கொண்டு, உன்னுடைய வேதத்தை உண்மைப்படுத்தி, உன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி, உன்னுடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களின் ஸுன்னத்தை பின்பற்றியவனாக இதை நான் செய்கின்றேன்”)

ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட முடியவில்லையென்றால் தனது கையால் சைக்கினை மாத்திரம் செய்து கொள்ள வேண்டும். கையால் சைக்கினை செய்து அக்கையை முத்தமிடக் கூடாது. பின்னர் தவாஃப் செய்ய வேண்டும்.

Wednesday, February 5, 2014

திருக்குர்ஆனை படிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்!

திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் படிப்பதோடு நின்றுவிடாமல் அதனை ஆழமாக சிந்தித்துப் பார்ப்பவர்கள்; இன்ஷா அல்லாஹ், ''எவருடைய கண்களும் காணாத, எவருடைய காதுகளும் கேட்டிராத இனிமையான சுவனத்திற்கு வழிகாட்டும் தித்திக்கும் தேன்மொழியாக'' அதனைக் காண்பார்கள் - உணர்வார்கள்.
 (இது திருக் குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை (அல்லாஹ்வாகிய) நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.'' (அல்குர்ஆன்: 24:1)


 அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). (அல்குர்ஆன்: 18:02)


 தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்குர்ஆன்: 9:32)


 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ‘ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66)


 இன்னும் எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 22:3)

அல்லாஹ்வின் வாக்குறுதிகள்

  அல்லாஹ்வின் வாக்குறுதிகள்  

அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்

* (நபியே!) நீர் கூறுவீராக; இவ்வுலக இன்பம் அற்பமானது; மறு உலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எவ்வளவேணும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 4:77)

* அல்லாஹுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான கூலி) உங்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படும். அதில் ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 8:60)

* அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்கு பரிபூரணமாத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (c2:272)

* (நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக் கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவது போல்) அல்ல. அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இவ்விஷயத்தில்) எவரும் ஒரு அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:49)

* நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்)புத்தகம் நம்மிடம் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 23:62)

* ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு. ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பரிபூரணமாகப் பெறுவதற்காக. ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 46:19)

* எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான-நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்து விடுமென்றோ பயப்பட மாட்டார். (அல்குர்ஆன் 20:112)

* எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு நன்மை உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப் போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார். (அல்குர்ஆன் 6:160)

* தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டு, ஸாலிஹான (நற்) செயல்களைச் செய்கிறார்களோ அவர்களைத் தவிர; (மற்றவர்கள் நரகக் கேட்டை சந்திப்பார்கள்) அத்தகைய (ஸாலிஹான)வர்கள் ஜன்னத்(சுவர்க்கத்)தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டி நற்பயன்கள்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. (அல்குர்ஆன் 19:60)

* நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)

* (நபியே!) நாம் எல்லா மக்களையும் அவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவர்களது வலது கரத்தில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 17:71)

* ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அல்லாஹ் அனுப்பிய இறை தூதர் உண்டு; அவர்களுடைய தூதர்(அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 10:47)

* பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; அவர்களது செயல் குறிப்பேடு அவர்கள் முன் வைக்கப்படும்; இன்னும் நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 36:69)

* அல்லாஹ் (தன்) அடியார்களுக்க அநியாயம் செய்ய நாட மாட்டான். (அல்குர்ஆன் 40:31)

Friday, December 27, 2013

தினம் ஒரு மூலிகை

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். சந்தையில் விலை மலிவாக கிடைக்கும் மூலிகைச்சாறு மற்றும் பழரசங்களில் (செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை) எந்த ஒரு சத்துக்களும் கிடைக்காது. நோய்கள் தான் பெருகும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.
திங்கள் – அருகம்புல்
ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

செவ்வாய் – சீரகம்
இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம்,மந்தம் நீங்கும்.

புதன் – செம்பருத்தி

இரண்டு செம்பருத்தி பூ( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்தவிருத்தி, இரத்தசுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

வியாழன் – கொத்துமல்லி

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மைஆகியவை நீங்கும்.

வெள்ளி – கேரட்

ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்.ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும்.இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும்.மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

சனி – கரும்பு சாறு

கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும்.உடல் பருமன், தொப்பை குறையும்.

ஞாயிறு – இளநீர்

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும்.இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

ஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்

ஆலிவ் எண்ணெய்  சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.

காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம்’ என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது.

Friday, November 22, 2013

நபிமார்கள் கேட்ட துஆக்கள்

நபிமார்கள் கேட்ட துஆக்கள்
  01. துஆக்கள் ஏற்கப்பட  
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ )
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்". எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (அல்குர்ஆன் 2: 127-128)

  02. ஈருலக நன்மை பெற  
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ )
"ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!"
 (அல்குர்ஆன் 2: 201)

  03. கல்வி ஞானம் பெற  
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ
( أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِي )
"அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்." (அல்குர்ஆன் 2:67)

  04. பாவமன்னிப்புப் பெற  
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ )
"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்;டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" (அல்குர்ஆன் 7: 23)

  05. படைத்தவனிடம் சரணடைந்திட  
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَاْ مِنَ الْمُشْرِكِينَ )
"வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்" (அல்குர்ஆன் 6: 79)

  06. விசாலமான உணவைப் பெற  
நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ )
"அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக. அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்" (அல்குர்ஆன் 5: 114)

  07. குழந்தைப்பேறு பெற  
நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء )
"இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்." (அல்குர்ஆன் 3: 38)

  08. இறைவனின் தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெற  
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( نتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الْغَافِرِينَ وَاكْتُبْ لَنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ إِنَّا هُدْنَا إِلَيْكَ )
"நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்."
''இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்" (அல்குர்ஆன் 7: 155, 156)

  09. சோதனையின்போது பொறுமை ஏற்பட  
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ )
"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (அல்குர்ஆன் 7: 126)

  10. கவலைகள் தீர  
நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( حَسْبِيَ اللَّهُ لا إِلَهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ )
"எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி." (அல்குர்ஆன் 9: 129)

  11. மாற்று சமயத்தவர்களுடன் நல்லுறவு ஏற்பட  
நபி ஷுஐபு அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ
( رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ )
"எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்." (அல்குர்ஆன் 7: 89)

  12. சகோதரருக்கு துஆ  
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ اغْفِرْ لِي وَلأَخِي وَأَدْخِلْنَا فِي رَحْمَتِكَ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ )
"என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்." (அல்குர்ஆன் 7: 151)

  13. துஆவில் தவறுகள் நடக்காமல் இருக்க  
நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ )
"என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்." (அல்குர்ஆன் 11: 47)

  14. அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற  
நபி ஹூ த் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللَّهِ رَبِّي وَرَبِّكُم مَّا مِن دَابَّةٍ إِلاَّ هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ )
"நிச்சயமாக நான்> எனக்கும் உங்களுக்கு இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழியிலிருக்கின்றான்." (அல்குர்ஆன் 11: 56)

  15. அல்லாஹ்வின் உதவி பெற  
நபி ஷுஐபு அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ
( وَمَا تَوْفِيقِي إِلاَّ بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ )
"மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன்." (அல்குர்ஆன் 11: 88)

  16. துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெற  
நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( فَاللَّهُ خَيْرٌ حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ )
"பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்" (அல்குர்ஆன் 12: 64)

  17. அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை வலுப்பட  
நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ
( عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ )
"அவன் மீதே நான் முழமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!" (அல்குர்ஆன் 12: 67)

Saturday, November 16, 2013

அல்ஹம்து லில்லாஹ் என அல்லாஹ்வைப் புகழ்வோம்.

அல்ஹம்து லில்லாஹ் என அல்லாஹ்வைப் புகழ்வோம்.

உலகத்தில் வாழக்கூடிய எந்த மனிதனாக இருந்தாலும் தனக்கு ஏதாவது சந்தோஷமான நிகழ்வுகளோ அல்லது பேரைப் புகழைப் பெற்றுத் தரக்கூடிய நிகழ்வுகளோ ஏற்படும் போது அது தன்னுடைய ஆற்றலாலும் அறிவாழும்தான் கிடைத்தது என நினைத்து விடுவதைப் பார்க்கிறோம். ஆனால் உண்மையான முஸ்லிமாக ஒருவர் இருந்தால் அவருக்கு இப்படிப் பட்ட நிகழ்வுகள் ஏற்பற்டால் அல்லாஹ் தான் இதை எனக்குத் தந்தான் எனது கையில் எதுவும் கிடையாது என்று நினைத்து அல்லாஹ்வைப் புகழ்வான் அப்படிப் புகழ்ந்தால்த் தான் அவன் உண்மை முஸ்லிமாக இருப்பான்.

ஏன் எனில் பெருமையையும்,கர்வத்தையும்,அகங்காரத்தையும் தடுப்பதே அல்லாஹ்வைப் புகழ்வதுதான்.ஒருவன் தனக்கு விருப்பமான ஒரு காரியம் நடக்கும் போது அல்லாஹ்வைப் புகழ்ந்தான் என்றால் அவனிடத்தில் பெருமையோ,அல்லது அகங்காரமோ இல்லை என்பதை நாம் தெளிவாக அறிய முடியும்.இதைத்தான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு அறுவுறித்தியுமுள்ளார்கள்.
அந்த அடிப்படையில் அல்லாஹ்வைப் புகழுவதுடைய தெளிவான நிலைப்பாட்டை நாம் அறிந்து கொள்வோம்.

இறைவனைப் புகழ்வது பெருமையைத் தடுக்கும்.
மக்காவை நபிகள்(ஸல்)அவர்கள் வெற்றி பெற்ற போது இறைவன் நபிகளாருக்கு அல்லாஹ்வைப் புகழும் படி கட்டளை இடுகிறான்.
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹ{ செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் ”தவ்பாவை”" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். (110:1,2,3)

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் பெரிய அளவில் ஒரு வெற்றி கிடைக்கின்ற நேரத்தில் படைத்தவனை மறந்து அது தன்னுடைய ஆற்றலால் கிடைத்தது என நினைத்து விடுவான் அதனைத் தடுப்பதற்காகத்தான் இறைவன் நபியவாகளையே முதலில் அல்லாஹ்வைப் புகழும் படி கூறுகிறான்.

மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்வைப் புகழ்தல்.
இப்றாஹீம் நபியவர்களுக்கு அல்லாஹ் குழந்தைப் பாக்கியத்தை அவர்களுடைய வயதின் முதிர்ச்சியில்த்தான் கொடுத்தான் அந்நேரத்தில் கொடுத்தாலும் அதையும் தன்னுடைய இறைவனின் ஆற்றல்தான் என நினைத்து அவனைப் புகழும் படி இறைவன் கூறுகிறான்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.(14:39)
ஆக நமக்கு ஒரு சந்தோசமான நிகழ்வு ஏற்படும் போதும் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனது துதி பாட வேண்டும்.
கவலைகள்,கஷ்டங்கள் நீங்கும் போதும் இறைவனைப் புகழ்தல்.

நமக்கு ஒரு கஷ்டம்,அல்லது கவலை நீங்கும் போது அல்லாஹ்வைப் புகழும் படி நமக்கு இறைவன் கட்டலையிடுகிறான்.

எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்”" என்றும் அவர்கள் கூறுவார்கள்.(35:34)
நபி நூஹ்(அலை)அவர்கள் காலத்தில் அநியாயக் காரர்களை அழிப்பதற்காக அல்லாஹ் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினான் அந்நேரத்தில் நூஹ் நபியவர்களைப் பற்றி கூறும் போது கப்பலில் ஏறியவுடன் அநியாயக் காரர்களிடம் இருந்து காப்பாற்றியதற்காக அல்லாஹ்வைப் புகழும்படி இறைவன் கூறுகிறான்.
நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்; ”அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”" என்று கூறுவீராக!(23:28)
இப்படி நாமும் நமக்கு ஏதும் கஷ்டங்கள்,கவலைகள் ஏற்பட்டு அது நீங்கியவுடன் அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.

சுலைமான் நபியும்,தாவுத், நபியும் அல்லாஹ்வையே முதலில் புகழ்ந்தனர்.
உலகத்திலேயே எந்த ஒருவருக்கும் வழங்கப் படாத ஒரு ஆட்சி,அதிகாரம் நபி தாவுதுக்கும்,நபி சுலைமானுக்கும் வழங்கப் பட்டது.அவர்களுடைய ஆட்சி எப்படி இருந்தது என்றால் உலகத்திற்கே அவர்கள் ஆட்சியாளர்கள்.இன்னும் சுலைமான் நபியவர்களுக்கு அல்லாஹ் பறவைகள்,விலங்குகளின் பாசையைப் புரியும் ஆற்றவையும் கொடுத்திருந்தான்.

அத்துடன் காற்றும் கூட அவருக்குக் கட்டுப் பட்டிருந்தது.இப்படியெல்லாம் வளங்களைப் பெற்றும் கூட சுலைமான் நபியும் தாவுத் நபியும் இறைவனை மறக்காமல் எங்களுக்கு இவ்வளவு அருளையும் கொடுத்தவன் அல்லாஹ்தான் எனக்கூறி அவனையே புகழ்ந்தார்கள் என்று அல்லாஹ் அல்குர்ஆனிலே சிலாகித்துக் கூறுகிறான்.

தாவூதுக்கும், ஸ{லைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்; ”புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்”" என்று கூறினார்கள்.(27:15)

வாதாட்டங்களில் அடுத்தவரை ஜெயித்தாலும் அல்லாஹ்வைப் புகழ்தல்.
நபி(ஸல்)அவர்கள் மக்கத்து காபிர்களிடம் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்து வைத்த நேரத்தில் அவர்கள் நபியவர்களை எதிர்பதற்கும்,அவர்களின் ஏகத்துவக் கொள்கைக்கு முட்டுக்கட்டை போடுவதற்க்கும் பல வாதங்களை முன்வைத்தார்கள். அப்படி வாதங்களை முன்வைக்கும் போது அல்லாஹ் நபியவர்களிடம் ஒரு பதில் வாதத்தைக் கற்றுக் கொடுக்கிறான் அதை அந்த காபிர்களிடம் எடுத்து வைத்தால் அவர்கள் உடனே உமது வாதத்தை ஏற்று தோல்வியை ஒத்துக் கொள்வார்கள்.

அப்படி அவர்கள் தோல்வியை ஒத்துக் கொள்ளும் போது இந்த வாதத்திரமை உங்கள் ஆற்றலால் வந்தது என நினைத்து பெருமைப் பட்டு விடாமல் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்துங்கள்.என அல்லாஹ் நபிகள்(ஸல்)அவர்களுக்கும் கட்டலையிடுகிறான்.

ஏன் என்றால் பெருமையைப் பொருத்தவரையில் சொத்து,செல்வாக்கில் வருவதை விட அறிவு விஷயத்தில்தான் அதிகம் பெருமை ஏற்படும்.
இன்னும், அவர்களிடம்; வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை – அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீர் கேட்பீராகில்; அல்லாஹ் என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.(29:63)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள், அல்லாஹ் என்றே நிச்சயமாக சொல்லுவார்கள்; அல்ஹம்து லில்லாஹ் – எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று நீர் கூறுவீராக் எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.(31:25)

அடுத்தவனுக்கு நன்மை ஏற்பட்டதற்க்காக இறைவனைப் புகழ்தல்.

அனஸ்(ரலி) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு åதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி(ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, இஸ்லாதை ஏற்றுக் கொள்! என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், அபுல் காஸிம் (நபி(ஸல்) அவர்கள்) சொல்வதைக் கேள் என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி(ஸல்) அவர்கள், இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.(புஹாரி:1356) 

ஒரு யூதச்சிறுவனுக்கு நேர்வழி கிடைத்ததற்க்காக நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்கிறார்கள்.இதனடிப்படையில் நம்முடைய சகோதரன் ஒருவனுக்கு ஒரு நன்மை ஏற்பட்டாலும் அந்த நன்மையை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்பது இந்தச் நிகழ்ச்சியிலிருந்து நமக்குத் தெரிய வருகின்றது.

சாப்பிட்டு முடித்தவுடன் அல்ஹம்துலில்லாஹ்.

இறைவன் நமக்கு எத்தனையோ அருளைக் கொடுத்திருக்கிறான் அவை அனைத்திற்கும் நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் நன்றி செலுத்தினாலும் நம்மால் நன்றி செலுத்திட இயலாது ஆனால் அல்;லாஹ்வோ அற்பமானதில் கூட திருப்திப் படுபவனாகத்தான் இருக்கிறான்.
ஒரு மனிதன் உணவு உண்பதென்பது ஒரு சாதாரன விஷயம்.ஆனால் அதில் கூட உணவு உண்டு முடித்தவுடன் இந்த உணவை எனக்குத் தந்த இறைவனுக்கே எல்லாப் புகழும் என அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என இஸ்லாம் நமக்குக் கற்றுத்தருகிறது.
தூய்மையான பாக்கியம் நிரைந்த,அதிக அளவிலான புகழ் அல்லாஹ்விற்கே அவனது அருற்கொடை மறுக்கப் பட்டதல்ல.நன்றி மறுக்கப் படுவதுமன்று,அது தேவையற்றதுமல்ல. (புகாரி :5858)

Thursday, March 28, 2013

நன்மை பயக்கும் நபிமொழி

பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும்
"ஒரு மனிதர் கதவில் ஒரு துவாரத்தின் வழியாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அறையினுள் எட்டிப் பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஈர்வலி சீப்பு ஒன்றிருந்தது. அதன் மூலம் அவர்கள் தமது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்கள். அவரைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால், இந்த ஈர்வலியால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன்'' என்று கூறி விட்டு, "(வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே, பார்வை (எல்லை மீறி வீட்டிலிருப்பவர்கள் மீது விழக்கூடும் என்ற) காரணத்தால்தான்'' என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4358)
 சப்தமிட்டு திக்ர் செய்யாதீர்கள்
"நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்றும், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூசா அல்-அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2992)
 எந்த உணவையும் ஒரு போதும் குறை சொல்லாதீர்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டு விடுவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5409)
 வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், "உங்களுக்கு முன்னிருந்த(சமுதாயத் த)வர்கள் தங்களுடைய நபிமார்கள், நற்குணங்கொண்டோரின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்துவிட வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்" என்று கூறியதை நான் செவியுற்றேன். (அறிவிப்பாளர் : ஜுன்தப் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 827)
 சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட...
'உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்து விட்டு, "அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸாயீ 148)

அன்னை ஃபாத்திமா[ரலி]

இம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி]


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஆகவே, அவரை [அந்தக் குழந்தையை] அவருடைய இறைவன் அழகியமுறையில் ஏற்றுக்கொண்டான். அதை நல்ல பயிராக வளரச் செய்தான். அதற்கு ஜக்கரியாவைப் பொறுப்பாக்கினான். மர்யம் இருந்த மாடத்திற்குள் ஜக்கரிய்யா நுழைந்த போதெல்லாம் அவருக்கருகில் ஏதேனும் உணவுப் பொருள்  இருப்பதைக் கண்டு, ''மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். அதற்கு அவர், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினார்''
அல்-குர்'ஆன் 3 ;37
மேற்கண்ட வசனத்தில் அன்னை மரியம் அவர்களுக்கு உணவு கிடைத்த விதம் பற்றி நபி ஜக்கரிய்யா[அலை] அவர்கள் விசாரிக்கும் போதெல்லாம், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் வார்த்தையை அன்னை மர்யம்[அலை] பயன்படுத்தினார்கள் என்பதை அல்லாஹ் அருள்மறையில்
சொல்லிக் காட்டுகின்றான். அன்னை மர்யம்[அலை] அவர்களைப் போன்றவர் என்று நபி[ஸல்] அவர்களால் பாராட்டப்பட்டவர் யார் தெரியுமா? அறிந்து கொள்ள கீழே உள்ள பொன்மொழியை படியுங்கள்;

ஜாபிர்[ரலி] அவர்கள் கூறியதாவது;
ஒரு தடவை நபி[ஸல்] அவர்கள் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். எனவே, தம்முடைய துணைவியாரின் வீடுகளுக்குச் சென்று பார்த்தஹர்கள். அவர்களிடமும் எதுவும் கிடைக்கவில்லை. உடனே [தம்முடைய மகள்] ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் வந்து, மகளே! நான் பசியோடு இருக்கின்றேன்; சாப்பிடுவதற்கு உன்னிடம் ஏதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு பாத்திமா[ரலி], ''என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! [என்னிடம்] எதுவுமில்லை'' என்று கூறினார்கள். அதனால் நபி[ஸல்]அவர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு ஃபாத்திமா[ரலி] அவர்களுக்கு பக்கத்து வீட்டுப் பெண்மணி இரு ரொட்டிகளையும் சில இறைச்சி துண்டுகளையும் கொடுத்தனுப்பினார்.

அவற்றை வாங்கிக்கொண்ட ஃபாத்திமா[ரலி] அவர்கள் ஒரு பாத்திரத்தில் வைத்து, ''இந்த உணவு விசயத்தில் என்னைவிடவும், என்னைச் சேர்ந்தோரை விடவும் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்போகிறேன்'' என்று கூறினார்கள். முன்னதாக அவர்கள் அனைவரும் வயிறார உண்ணவேண்டிய தேவையுடையவர்களாகவே இருந்தனர்.

பின்னர் ஹசன்[ரலி] அல்லது ஹுசைன்[ரலி] அவர்களை அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களிடம் அனுப்பி அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். நபி[ஸல்] அவர்கள் ஃபாத்திமா[ரலி] அவர்களிடம் திரும்ப வந்தார்கள். அப்போது ஃபாத்திமா[ரலி] ''அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கே அர்ப்பணம்! அல்லாஹ் சிறிதளவு உணவுப் பொருளை கொடுத்துள்ளான். அதைத் தங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். மகளே! அதைக் கொண்டுவா'' என நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து அன்னை பாத்திமா[ரலி] அவர்கள் கூறினார்கள்; அந்த உணவுத்தட்டை எடுத்து வந்து திறந்து பார்த்தேன். அப்போது தட்டு நிரம்ப ரொட்டியும், இறைச்சியும் இருந்தன. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட நான், அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால் அல்லாஹ்வை புகழ்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் மீது ஸலவாத் கூறினேன்.

பின்னர் நபி[ஸல்] அவர்களுக்கு
முன்னால் அந்த தட்டை கொண்டு வந்து வைத்தேன். அதைப் பார்த்த நபி[ஸல்] அவர்கள், அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு, ''மகளே!இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?''என்று கேட்டார்கள். அதற்கு நான், ''என் தந்தையே! இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறினேன்.''

உடனே அல்லாஹ்வை புகழ்ந்த நபி[ஸல்] அவர்கள், ''மகளே! இஸ்ரவேல பெண்களுக்குத் தலைவி[யான மர்யமைப்]போன்று உன்னை ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவருக்கு [மர்யம்] அல்லாஹ் ஏதேனும் உணவளித்து, அது குறித்து யாரேனும் அவரிடம் வினவினால், ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது; அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்.'' என்று கூறினார்கள். ஹதீஸ் சுருக்கம்; நூல் முஸ்னது அபீயஅலா.

மேற்கண்ட பொன்மொழியில் அன்னை ஃபாத்திமா[ரலி] அவர்களின் பல நற்பண்புகள் மற்றும் இறையச்சம் மிளிர்வதைக் காணலாம். தனக்கு ஏதேனும் உணவு கிடைத்தால், அன்னை மர்யம்[அலை] அவர்கள் எப்படி அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தி, ''அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்'' என்று கூறுவார்களோ, அதே போன்று அன்னை பாத்திமா[ரலி] அவர்களும் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் குணத்தை கொண்டுள்ளதால், அன்னை பாத்திமா[ரலி] அவர்களை, அன்னை மர்யம்[அலை] அவர்களோடு ஒப்பிட்டு நபி[ஸல்] அவர்கள் சிலாகித்து கூறுகிறார்கள். மேலும், தான் பசியோடு இருந்த நிலையில் தனக்கு ஒரு உணவு கிடைத்த மாத்திரமே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களுக்கே முன்னுரிமை என்று சொன்ன அன்னை ஃபாத்திமா[ரலி] அவர்கள், அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்களின் மீது எந்த அளவுக்கு அளப்பரிய பாசம் கொண்டிருந்தார்கள் என்பதையும் நம்மால் உணரமுடிகிறது. அதோடு இந்த சம்பவத்தில் நாம் பெறவேண்டிய முக்கியமான படிப்பினை என்னவெனில், நமக்கு ஒரு நலம் விளையுமானால் இது அவரால் விளைந்தது; இவரால் விளைந்தது என்று பெருமையடிக்காமல், இது அல்லாஹ் வழங்கியது அவன் நாடியவர்களுக்கு கணக்கின்றி வழங்குவான் என்ற வாத்தை நம்மிடம் வெளிப்படவேண்டும். அவ்வாறு அனைத்திலும் அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தினாலே ஆணவம்-பெருமை அடிபட்டுப் போகும்.

 எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னை மர்யம்[அலை] மற்றும் அன்னை ஃபாத்திமா[ரலி] ஆகியோர் மீது நல்லருளை நல்கிடுவானாக!  
 
 
 

பெண்களின் ஜனாஸா - சில விளக்கங்கள்




பெண்களின் ஜனாஸா - சில விளக்கங்கள்
ஒவ்வொருவர் மீதும் அல்லாஹ் மரணத்தை விதித்துவிட்டான். நிரந்தரமாக இருப்பது என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்.

''(மிக்கவல்லமையும்) கண்ணியமும் சங்கையும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.'' (அல்குர்ஆன் 55:27)

'நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் வந்தடைந்தே தீரும் மிகவும் உறுதியாக கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே" (4:78)

ஜனாஸாக்களில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்துவது உயிரோடு உள்ளவர்கள் மீது கடமையாகும். அவற்றில் பெண்கள் சம்பந்தப்பட்டவைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

1. பெண்களின் ஜனாஸாவை பெண்களே குளிப்பாட்ட வேண்டும்.
ஆண்கள் பெண்கள் ஜனாஸாவை குளிப்பாட்டுவது கூடாது இறந்துபோன பெண்ணின் கணவன் மட்டும் தன் மனைவியை குளிப்பாட்ட அனுமதியுண்டு, ஆண் ஜனாஸாவை ஆண்களே குளிப்பாட்ட வேண்டும். இறந்து போன ஆணின் மனைவி மட்டும் தான் கணவனைக் குளிப்பாட்ட அனுமதியுண்டு.

அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் மனைவியான ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.

அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணமடைந்தபோது அவர்களின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.

2. பெண் ஜனாஸா ஐந்து துணிகளில் கஃபன் செய்யப்படுவது சிறந்தது.

கீழங்கி, தலையில்போடும் துணி, சட்டை அதற்குமேல் இரண்டு துணியைக் கொண்டு ஜனாஸாவின் உடம்பு முழுவதும் மூடப்படும்.

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் உம்மு குல்ஸூம் ரளியல்லாஹு அன்ஹா மரணமடைந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப் பாட்டியவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனாஸாவிற்கு அணிவிப்பதற்காக முதல் முதலாக எங்களிடம் தந்தது கீழங்கி, பின்னர் சட்டை பின்னர் தலையில் போடும் துண்டு, பின்னர் ஜனாஸாவை மூடுவதற்குண்டான துணி, பின்னர் அதே மாதிரி இன்னொரு துணியிலும் மூடப்பட்டார்கள்'' என லைலா அத்தகபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவுத்)

3. பெண் ஜனாஸாவின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்னால் போடவேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளுடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது பற்றி உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் போது ''அவர்களின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்பக்கம்போட்டோம்'' என்று குறிப்பிடுகிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

4. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து பெண்கள் செல்லுதல்.

''ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது எங்களுக்கு தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அது கண்டிப்பான முறையில் தடுக்கப்படவில்லை'' என உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

5. கப்ர் ஸியாரத் பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.

''கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்'' என அபூஹாரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அஹ்மத், திர்மிதி மற்றும் இப்னுமாஜா.)

6. ஒப்பாரி வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பாரி வைப்பதும், ஆடைகளைக் கிழிப்பதும் கன்னத்தில் அடிப்பதும் முடியைப் பிடுங்குவதும் முகத்தைப் பறண்டுவதும், தகாத வார்த்தைகளைக் கூறுவதும் இதுபோன்ற அல்லாஹ் விதித்த விதியில் பதட்டத்தை ஏற்படுத்துகின்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது பொறுமை இழந்து நிற்பது பெரிய குற்றமாகும்.

''துன்பத்தின்போது கன்னத்தில் அடிப்பவனும் சட்டையை கிழிப்பவனும் அறியாமை காலத்து பிரார்த்தனையைச் செய்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

மேலும், ''சோதனையின்போது சப்தத்தை உயர்துப வளை விட்டும் தலைமுடியை மளிப்பவளை விட்டும், ஆடையை கிழித்துக் கொள்பவளை விட்டும் நான் ஒதிங்கிக் கொண்டேன்'' என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

''ஒப்பாரி வைப்பவளையும் ஒப்பாரியைக் கேட்டு மகிழ்பவளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.'' (நூல்: முஸ்லிம்)

முஸ்லிம் சகோதரியே! சோதனையின்போது இதுபோன்ற தடுக்கப்பட்ட செயல்களை விட்டும் ஒதுங்கிக்கொள்! சோதனையின்போது பொறுமையைக் கடைபிடித்துக் கொள்! உனக்கு ஏற்படக்கூடிய சோதனை உன்னுடைய பாவத்திற்கு பரிகாரமாகவும் உன்னுடைய நன்மையை அதிகரிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடும்.

அல்லாஹ் கூறுகிறான்: ''நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், (ஆனால்) பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நற்செய்தி கூறுவீராக!''

''அவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபை யும் உண்டாகின்றன. இன்னும் இவர்களே நேர்வழியை அடைந் தவர்கள். (அல்குர்ஆன்: 2:155, 157)

அதேநேரத்தில் ஒப்பாரியும், அனுமதிக்கப்படாத செயல்களும், அல்லாஹ்வின் விதியின் மீது கோபப்படுவதும் இல்லாத அழுகை ஆகுமானதாகும். ஏனெனில் அப்படி அழுவது மரணித்தவரின் மீதுள்ள அன்பையும் உள்ளத்தில் மென்மையையும் காட்டுவதுடன் மனிதனால் தடுக்கமுடியாத ஒன்றாகவும் உள்ளது. எனவே அது ஆகுமானதாகிறது. சில வேளை அது அனுமதிக்கப் பட்டதாகவும் சில வேளை அது விரும்பத்தக்கதாகவும் ஆகிறது. அல்லாஹ் உதவப் போதுமானவன்.

Tuesday, January 15, 2013

அலிஃப் லாம் மீம், ஹாமீம், யாஸீன் - இந்த பதங்களின் முக்கியத்துவம் என்ன?.

அலிஃப் லாம் மீம். இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.'(அல்குர்ஆன் 2: 1-2).

குர்ஆனின் சில அத்தியாயங்கள் அலிஃப் - லாம் - மீம் - எனவும் - ஹாமீம் எனவும் - யாஸீன் எனவும் துவங்குகிறதே. இந்த பதங்களின் முக்கியத்துவம் என்ன?.

அலிஃப் - லாம் - மீம், யாஸீன், ஹாமீம் போன்ற எழுத்துக்களுக்கு அரபியில் 'அல்-முகத்ததத்' (சுருக்கப்பட்ட எழுத்துக்கள்) என்று பெயர். அரபி மொழியில் மொத்தம் இருபத்து ஒன்பது (அலிஃப் - மற்றும் ஹம்ஸ் என்கிற எழுத்துக்களை இரண்டாக கருதினால்) எழுத்துக்கள் இருக்கின்றன.

அதேபோல அருள் மறை குர்ஆனிலும் இருபத்து ஒன்பது அத்தியாயங்கள் மேற்படி சுருக்கப்பட்ட எழுத்துக்களை கொண்டு துவங்குகின்றன. இவ்வாறு சுருக்கப்பட்ட எழுத்துக்கள் சில அத்தியாயங்களில் தனித்தும், சில அத்தியாயங்களில் இரண்டாகவும், சில அத்தியாயங்களில் மூன்று எழுத்துக்களாகவும், சில அத்தியாயங்களில் நான்கு அல்லது ஐந்து எழுத்துக்களாகவும் சேர்ந்து வரும்.
A). அருள்மறையின் கீழ்க்காணும் மூன்று அத்தியாயங்கள் ஒரே ஒரு எழுத்தினை கொண்டு துவங்குகின்றன.

Monday, December 17, 2012

எப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள்

1 தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டடை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இருதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் மூன்றாண்டுகளை அதிகரிகëகும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள். இருதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலத்தைக் காக்கும் `செலினியம்ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.
2. உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணை வகை மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய `ஒமேகா 3 பேட்டி ஆசிட்’, எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.
3. சாப்பாடுகளுக்கு இடையே 3 மணி நேர இடை வெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.
4. தினசரி நான்கு `கப்காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன பேர்வழி எனறு காபியையே துறக்க வேண்டாம். அளவாக காபி பருகுவது, சர்க்கரை நோய், உணவுக் குழாய் கேன்சர், ஈரல் நோய்களைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
5. தினந்தோறும் 5 வகை பழஙகள், காய்கறிகள் சாப்பìடுவது ஆரோக்கிய ஆரோக்கியவாழ்வுக்குவுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள `ஆண்டிஆக்ஸிடன்ட்கள்கேன்சர், இருதய நோய்கள் போன்ற மோசமான நோய்களைத் தடுக்கும்; நோய்த்தொற்றுக்கு எதிராக இருக்கும். மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரைச் சத்தையும் கொண்டுள்ளன.
6. வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்கவேண்டாம். சமையல் செய்யும் போதுமட்டும் உப்பை சேர்க்கவேண்டும். பிரெட், `பேக்கிங் உணவுவகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.
7. மொத்தம் 7 வகையான நிறங்களைக் கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களைகொண்டிருக்கின்றன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.
8. தினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம்.
9. சராசரியாக பெண்கள் 9 வகை மாவுச்சத்து உணவுகளை (ஆண்களுக்கு 11 வகை) சாப்பிட வேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக்கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம.

Tuesday, December 4, 2012

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிறப்புகள்

  நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிறப்புகள்   
o 'இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா விரை வீக்கமுடையவர். எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை' என இஸ்ரவேலர்கள் கூறினார்கள்.
ஒரு முறை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதைத் தொடர்ந்து 'கல்லே! என்னுடைய ஆடை!' என்று சப்தமிட்டுச் சென்றார்கள்.
அப்போது, இஸ்ரவேலர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்துவிட்டு 'அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை' என்று கூறினார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களின் ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்" என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
"அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கல்லைக் கொண்டு அந்த கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள்" என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்.'' (நூல்: புகாரீ 278)

o ''உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவரின் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்து விட்டார்கள்.
உடனே அவர் அல்லாஹ்விடம் போய், 'இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியானிடம் நீ என்னை அனுப்பிவிட்டாய்' என்றார். பிறகு அல்லாஹ் அவரின் கண்ணைச் சரிப்படுத்திவிட்டு, 'நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையைவைக்கச் சொல்லி, அவரின் கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும்" என அனுப்பி வைத்தான்.
(அவ்வாறே அவர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து கூறியபோது,) மூஸா அலைஹிஸ்ஸலாம் 'இறைவா! அதற்குப் பிறகு?' எனக் கேட்டதும் அல்லாஹ், 'பிறகு மரணம் தான்' என்றான். உடனே மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 'அப்படியானால் இப்பொழுதே (தயார்)' எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும் புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத் தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டினார்கள்.
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது, 'நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரைக் காட்டியிருப்பேன்" எனக் குறிப்பிட்டார்கள்.'' (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 1339)

o ''ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!" என்று கூறினார்.
அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!" என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள்.
ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா அலைஹிஸ்ஸலாம், (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்.
மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.'' (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 2411)

o ''இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, 'அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்" என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், '(அந்தத் தோழர்) யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அன்சாரிகளில் ஒருவர்" என்று கூறினார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்" என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், 'இவரை நீர் அடித்தீரா?' என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, 'இவர் கடைவீதியில், 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன். உடனே நான், 'தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா அலைஹிஸ்ஸலாம் மேன்மை வாய்ந்தவர்)?' என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்" என்று கூறினார்.
இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். 'மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா என்று எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.'' (அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ 2412)